- வாயுவை வெளியேற்றாமல் அடக்கி வைத்தால் வீக்கம், தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இப்படி தொடர்ந்து செய்தால் நாளடைவில் வயிறு இறுக்கமாகி வாயுவை வெளியேற்றக் கூட மறந்துவிடும்.
- வாயுவை வெளியேற்றாமல் இருந்தால் வாயு குடலில் தங்கி வயிற்றுக்குள் அழுத்தத்தை அதிகரித்து வலியை ஏற்படுத்தும்.
- வாயுவை வெளியேற்றாமல் அடக்கி வைத்தால் வயிறு உப்புசமாக உணர்வீர்கள்.
- வாயுவை தொடர்ச்சியாக அடைக்கினால் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகள் வரக்கூடும்.
- அடுக்கி வைக்கப்பட்ட வாயு ஏப்பமாக வாய் வழியாக வெளியேறும்.
- சில சமயங்களில் வாயுவை அடக்கும்போது அது இத்த ஓட்டத்தில் பரவி நுரையீரலுக்குள் சென்று மூச்சு வெளியேறும் போது அதுவும் வெளியேறிவிடும்.