Knee Pain Relief Tips : தாங்கவே முடியாத மூட்டுவலிக்கும் 'நிவாரணம்' அளிக்கும் எளிய வழிகள்; ஒருமுறை செஞ்சு பாருங்க

Published : Dec 16, 2025, 11:23 AM IST

கடுமையான மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் வாழ்க்கை முறையில் சில விஷயங்களை கடைப்பிடித்தால் வலியை குறைக்கலாம். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.

PREV
16
Knee Pain Relief Tips

மூட்டு வலி என்பது தற்போது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. வயதானவர்களை காட்டிலும் நடுத்தர வயதினரும், இளைஞர்களும் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள். இது மருந்துகளால் குணமாகக்கூடிய நோய் அல்ல. சிகிச்சையுடன் வாழ்க்கை முறை, உணவு மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவையும் அவசியம். இல்லையெனில் வலி கூடுதலாக இருக்கும். மூட்டு வலியை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் பாதிப்பு அதிகரிப்பதைத் தடுக்கலாம். எனவே, தாங்கவே முடியாத மூட்டுவலியை கொண்டிருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும். வலியை குறைத்து விடலாம். அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.

26
உடற்பயிற்சி செய்யவும் :

நடப்பதற்கு சிரமமாக இருக்கும்போது எப்படி உடற்பயிற்சி செய்வது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் உடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுப்படும். இதற்காக கடினமான குறிப்பாக மூட்டுகளை அழுத்து பயிற்சிகளை செய்ய வேண்டாம். உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசித்து உடற்பயிற்சிகளை செய்யவும். உடற்பயிற்சி செய்யும் போது வீக்கம், வலி ஏற்படும் போது சிறிது நேரம் ஓய்வெடுத்து பின் மீண்டும் செய்யவும்.

36
மசாஜ் செய்யலாம் :

மூட்டு வலியை குறைக்க தினமும் காலை மாலை என இரண்டு வேளையும் மென்மையான மசாஜ் செய்து வந்தால் ஒரே மாதத்தில் வலி குறைவதை நீங்கள் உணர்வீர்கள். ஒருவேளை மசாஜ் செய்த பிறகு ஊட்டில் வலி அல்லது வீக்கம் அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.

46
உணவில் கவனம் தேவை!

நீங்கள் மூட்டு வலிக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது மருத்துவர் செல்லும் உணவு முறையை தவறாமல் பின்பற்றுங்கள். உணவு மூட்டு வலியை குறைக்காது. ஆனால் அதிகரிக்காமல் தடுக்க உதவும்.

56
ஒத்தடம் :

மூட்டு வலி அதிகமாக இருக்கும் போது வலியை குறைக்க சூடான நீரில் ஒத்தடம் கொடுக்கலாம். ஆனால் அதிக சூட்டில் அல்ல. சூடான நீரில் ஒத்தடம் கொடுத்தால் வலி மற்றும் விறைப்பு நீங்கும். இதமாகவும் உணர்வீர்கள்.

மேலும் உங்களுக்கு வலியுடன் வீக்கமும் இருந்தால் ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். இந்த ஒட்டகம் வீக்கம் மற்றும் வலியை குறைக்கும். தசைப்பிடிப்புக்கு ரொம்பவே நல்லது.

66
நல்ல தூக்கம் :

மூட்டு வலி கடுமையாக உள்ளவர்கள் தூக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தூக்கம் குறைவாக இருந்தால் வலி அதிகரிக்கும். மேலும் நடப்பதிலும் சிரமம் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. எனவே கடுமையான மூட்டு வலி இருப்பவர்கள் தினமும் சுமார் 8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். உங்களால் இரவு சரியாக தூங்க முடியாவிட்டால் பகல் நேரத்தில் சிறிது நேரமாவது தூங்கவும்.

Read more Photos on
click me!

Recommended Stories