Bananas : வாழைப்பழம் நல்லதுனு நினைக்குறீங்களா? அதை 'இப்படி' சாப்பிட்டால் தான் முழு ஊட்டச்சத்துகள்.. இல்லனா வேஸ்ட்

Published : Oct 04, 2025, 03:27 PM IST

நன்கு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்தால், இனி அதை குப்பையில் தூக்கி போட மாட்டீர்கள்.

PREV
17
Overripe Bananas Benefits

ஆப்பிளை போலவே தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். வாழைப்பழத்தில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. பொதுவாக வாழைப்பழத்தை வாங்கிட்டு வந்த ஒரு சில நாட்களிலே அவை நன்கு பழுத்து விடும். இதனால் அதன் தோல் நிறம் சற்று கருப்பு நிறமாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், அதை பெரும்பாலும் நாம் குப்பையில் எரிந்து விடுவோம். நன்கு பழுத்த பழத்தை யாருமே விரும்பிவதில்லை. ஆனால் இப்படி நன்கு பழுத்த பழத்தை சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

27
செல்கள் சேதமடைவதை தடுக்கும் :

நன்கு பழுத்த வாழைப்பழத்தில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகமாக உள்ளதால், அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவோம். அதுமட்டுமல்லாமல் செல்கள் சேதமடைவதையும் தடுக்கப்படும்.

37
இதய ஆரோக்கியம் :

பழுத்த வாழைப்பழம் இதயத்திற்கு ரொம்பவே நல்லது. ஏனெனில் இதில் பொட்டாசியம், மெக்னீசியம் நிறைந்துள்ளன. இவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் மற்றும் இதய நோய்கள் ஏதும் வராமல் தடுக்கும்.

47
செரிமான ஆரோக்கியம் :

நன்கு பழுத்த வாழைப்பழத்தில் இருக்கும் மாவுச்சத்து இருப்பதால் அவை எளிதாக ஜீரணமாகிவிடும். மேலும் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். பலவீனமான செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு நன்கு வாழைப்பழம் ரொம்பவே நல்லது.

57
நெஞ்செரிச்சல் குணமாகும் :

அதிகமாக பழுத்த வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் நெஞ்செரிச்சல் பிரச்சனை சரியாகும். ஏனெனில் இதில் இருக்கும் பண்புகள் வயிற்றில் உள்புறனியை தீங்கு விளைவிக்கும் அமிலங்களில் இருந்து பாதுகாக்கும். எனவே அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் தினம் நன்கு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாவீர்கள்.

67
தசை வலி சரியாகும் :

உங்களுக்கு தசை வலி இருந்தால் தினமும் நன்கு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். ஏனெனில் அதில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் அது தசை வலி மற்றும் தசைப்பிடிப்புகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

77
புற்றுநோயை தடுக்கும் :

அதிக பழுத்த வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் அது புற்றுநோய் மற்றும் பிற நோய்களின் செல்கள் வளர்ச்சியடைவதை தடுக்கும். எனவே உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால் நன்கு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories