நம்மில் பெரும்பாலானோர் காலை எழுந்தவுடன் ஒரு கப் டீ அருந்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். டீயில் இஞ்சி டீ, மசாலா டீ, ஏலக்காய் டீ என பல வகைகள் உள்ளன. அதில் ஏலக்காய் டீ நல்ல வாசனையாக இருப்பது மட்டுமல்லாமல் குடிப்பதற்கு சுவையாகவும் இருக்கும். இந்த டீ ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகிறது. ஆனால் சில உடல்நிலை பிரச்சினை உள்ளவர்களுக்கு ஏலக்காய் டீ நன்மைக்கு பதிலாக தீமை தான் விளைவிக்கும். சரி இப்போது இந்த பதிவில் யாரெல்லாம் ஏலக்காய் டீ குடிக்க கூடாது என்று தெரிந்து கொள்ளலாம்.
26
பித்தப்பை கற்கள் :
பித்தப்பையில் கற்கள் உள்ளவர்களுக்கு ஏலக்காய் டீ ஆபத்தை விளைவிக்கும். அதாவது ஏலக்காய் பித்தப்பை கற்களில் எரிச்சல் மற்றும் வலியை அதிகரிக்க செய்யும். எனவே பித்தப்பை கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிக்க கூடாது. வேண்டுமானால் சாதாரண டீ அல்லது மூலிகை டீ குடிக்கலாம்.
36
இரத்த மெலிதலுக்கான மருந்துகள்
ஏலக்காயில் இயற்கையாகவே இரத்தம் மெலிவு பண்புகள் உள்ளதால், நீங்கள் இரத்த மெலிதலுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தாள் ஏலக்காய் டீ குடிப்பது உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். உதரணமாக இரத்தப்போக்கை ஏற்படும். எனவே இரத்தம் மெலிவு மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் ஏலக்காய் டீ குடிக்கும் முன் முதலில் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
ஆய்வுகள் படி, ஏலக்காய் இரத்த சர்க்கரை அளவை குறைக்கு உதவுவதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் நீங்கள் ரத்த சர்க்கரை அளவை குறைக்க மருந்துகளை சாப்பிடுகிறீர்கள் என்றால், அதிகமாக ஏலக்காய் டீ குடிக்கும் போது, ரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து விடும். இது ரொம்பவே ஆபத்தானது. எனவே ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் ஏலக்காய் டீ குடிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
56
ஒவ்வாமை பிரச்சனை
சிலருக்கு ஏலக்காய் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். அத்தகையவர்கள் ஏலக்காய் டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது. மீறி குடித்தால் சரும வெடிப்பு, அரிப்பு, எரிச்சல், சுவாச பிரச்சனையை ஏற்படுத்தி விடும். மேலும் நீங்கள் ஏலக்காய் டீ குடித்த பிறகு உங்களது உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
66
கர்ப்பிணிகள்
கர்ப்பிணி பெண்கள் ஏலக்காய் டீ அதிகமாக குடிக்க கூடாது. மேலும் உணவுகளிலும் ஏலக்காயை அதிகமாக சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஏலக்காய் கருசிதைவு அபாயத்தை அதிகரிக்க செய்யும். அது மட்டுமல்லாமல் பாலூட்டும் தாய்மார்களும் ஏலக்காயை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.