பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடுவது நல்லது என்றாலும், சிலர் அதை சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். யாரெல்லாம் பாதம் சாப்பிடக்கூடாது என்று இங்கு பார்க்கலாம்.
பாதாமை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் தினமும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதுவும் தினமும் காலை 4-5 ஊற வைத்த பாதாமை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சொல்லுவதை கேள்விப்பட்டிருப்போம். நீங்களும் பாதாம் பருப்பை அப்படிதான் சாப்பிடுகிறீர்களா? ஆனால், சில உடல்நிலை பிரச்சினை உள்ளவர்கள் பாதாம் பருப்பை சாப்பிடக்கூடாது. அவர்கள் யார் யார் என்று இங்கு பார்க்கலாம்.
26
நட்ஸ் அலர்ஜி :
நட்ஸ் அலர்ஜி உள்ளவர்கள் பாதாம் சாப்பிடக்கூடாது. அப்படி தெரியாமல் சாப்பிட்டால் கூட சருமத்தில், அரிப்பு, எரிச்சல், வீக்கம், சருமம் சிவந்து போகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். ஒருவேளை நீங்கள் பாதாம் சாப்பிட்டால் ஏதாவது அலர்ஜி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
36
சிறுநீரக கற்கள் :
சிறுநீரக கற்கள் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் பாதாம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் பாதாமில் இருக்கும் ஆக்சிலேட்டுகள் சிறுநீரகத்தில் இருக்கும் கால்சியத்துடன் இணைந்து சிறுநீரகங்களில் கற்களை உற்பத்தி செய்யும்.
செரிமான மண்டலம் பலவீனமாக உள்ளவர்கள் பாதாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பாதாமில் நார்ச்சத்து போன்றவை செரிமானத்தை மோசமாக பாதிக்கும். மீறி சாப்பிட்டால் அஜீரணம், வாயு தொல்லை, கடுமையான வயிற்று வலி, மலச்சிக்கல், குடல் அலர்ஜி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும்.
56
இரத்த அழுத்தம் :
உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் பாதாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பாதாமில் இருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்த மருந்துகளோடு வினைபுரிந்து பிரச்சனையை ஏற்படுத்தி விடும். எனவே மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நீங்கள் பாதாம் சாப்பிட வேண்டாம்.
66
எடையை குறைக்க நினைப்பவர்கள் :
பொதுவாகவே எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் புரதத்திற்காக பாதாம் சாப்பிடுவார்கள். ஆனால் இவர்கள் தினமும் பாதாம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் பாதாம் மில் கலோரிகள் ரொம்பவே அதிகமாக இருக்கிறது. உடலில் கலோரி அதிகமானால் உடல் எடை அதிகரிக்கும்.