பொதுவாக காலை எழுந்ததுமே சூடாக ஒரு கிளாஸ் வெந்நீரை வெறும் வயிற்றில் குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. நாளின் தொடக்கத்தை சூடான நீருடன் தொடங்கினால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சொல்லப்படுகின்றது. இருப்பினும் சூடான நீரில் நெய், மஞ்சள் தூள் மற்றும் கருப்பு மிளகு தூள் சேர்த்து குடித்து வந்தால் உடலில் எதிர்பாராத மாற்றங்கள் நடக்கும். குறிப்பாக இந்த அற்புதமான பானம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், செரிமான அமைப்பை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
25
செரிமான அமைப்பு...
நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. நெய்யை சூடான நீரில் கலந்து குடிக்கும் போது அது செரிமான அமைப்புக்கு ஒரு மசக்கு எண்ணெய் போல செயல்படும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைக்கும், குடல் ஆரோக்கியமும் மேம்படும். இந்த பானமானது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும், கொழுப்பில் கரையக்கூடிய நச்சுக்களை அகற்றவும் உதவுகிறது.
35
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்...
மஞ்சளில் இருக்கும் குர்குமின் சக்தி வாய்ந்த அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்சனேற்ற பண்புக்கு பெயர் பெற்றதாகும். குர்குமின் உடலால் எளிதில் உறிஞ்சப்படாது. ஆனால் கருப்பு மிளகில் இருக்கும் பைபரின் குர்குமின் உறிஞ்சுதலை கணிசமாக அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. மேலும் நெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளுடன் இவற்றை எடுத்துக் கொள்ளும் போது உடலில் வீக்கம், மூட்டு வலி குறையும். இந்த மூன்று கலவை ஒன்று சேர்ந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே அடிக்கடி சளி, இருமல், தொண்டை வலிகள் அவதிப்படுபவர்கள் இந்த பானத்தை குடிப்பதன் மூலம் நல்ல பலனை பெறுவீர்கள்.
ஒரு கிளாஸ் சூடான நீரில் ஒரு ஸ்பூன் நெய், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் கருப்பு மிளகு சேர்க்கவும். அவ்வளவுதான் அற்புதமான தயார். இந்த பானத்தை தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
55
யார் குடிக்க கூடாது?
இந்த பானம் ஆரோக்கியமானது என்றாலும் சிலருக்கு நல்லதல்ல. அதாவது பித்தப்பை பிரச்சனை உள்ளவர்கள், அதிக அமலத்தன்மை மற்றும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இந்த பானம் நல்லதல்ல.இந்த பானத்தை குடிப்பதற்கு முன் ஒரு முறை மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.