கிரீன் டீயா, பிளாக் காபியா எது எடையை குறைக்கும் தெரியுமா?

Published : Jun 17, 2025, 09:11 AM IST

கிரீன் டீ அல்லது பிளாக் காபி இவை இரண்டில் எது உங்களது எடையை வேகமாக குறைக்க உதவும் என்று இந்த பதிவில் காணலாம்.

PREV
15
கிரீன் டீ vs பிளாக் காபி

பொதுவாக எடையை குறைக்க விரும்புபவர்கள் கிரீன் டீ அல்லது பிளாக் காபி எடுத்துக் கொள்வது வழக்கம். ஏனெனில் இவை இரண்டிலும் இருக்கும் நன்மைகள் எடை இழப்பில் பெரிதும் உதவுகின்றது. எடையை ஆரோக்கியமான முறையில் இலக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த இரண்டு பானங்களையும் தேர்வு செய்வார்கள்.

கிரீன் டீ மற்றும் பிளாக் காபியில் கலோரிகள் மிகக் குறைவாகவும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, நம் உடலில் இருக்கும் கொழுப்பை குறைத்து எடை இழப்புக்கு வழிவகுக்கும். ஆனால் இவை இரண்டில் எது உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது என்று இந்த பதிவில் காணலாம்.

25
எடையை குறைக்க கிரீன் டீ :

பொதுவாகவே எடையை குறைக்க விரும்புபவர்கள் தேர்வு செய்யும் முதல் பானம் கிரீன் டீ. பெரும்பாலான மக்கள் எடை இழுப்பதற்கு ஒரு நாளைக்கு 3-4 கப் வரை கிரீன் டீ குடிக்கிறார்கள். கிரீன் டீ பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது. காரணம் இதில் இருக்கும் காஃபின் மற்றும் கேடசின் தான். ஆய்வு ஒன்றின் படி, கேடசின் உடலில் அதிகமாக இருக்கும் கொழுப்பை குறைக்க பெரிதும் உதவுகிறது என்று கண்டறிந்துள்ளன.

கிரீன் டீ எடை இழப்பு, நல்ல தூக்கத்திற்கு முக்கி பங்கு வகிக்கிறது இது தவிர டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு கிரீன் டீ ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. அல்சைமர் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதை குறைக்க இந்த பானம் உதவுகிறது. கிரீன் டீயில் மெக்னீசியம், பிளேவனாய்டுகள், வைட்டமின் பி, போலேட் உள்ளன. இவை நாம் தினமும் விரும்பி குடிக்கும் பாலிடியில் கிடையாது.

35
எடையை குறைக்க பிளாக் காபி :

பிளாக் காபி எடை இழப்புக்கு பிரபலமான மற்றொரு பானமாகும். எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பலர் இந்த பானத்தை விரும்பி குடிக்கிறார்கள். கிரீன் டீ போலவே இந்த பானத்திலும் காஃபின் உள்ளதால் இது எடை இழப்புக்கும் நீரிழிவு அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது. பிளாக் காபி வளர்ச்சிதை மாற்ற செயல்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பசி எடுக்காமல், ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது.

பிளாக் காபியில் வைட்டமின் பி2, பி3, பி5, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

45
கிரீன் டீ அல்லது பிளாக் காபி: எது எடை இழப்புக்கு பெஸ்ட்?

இந்த இரண்டு பானங்களும் வெவ்வேறு வழிகளில் எடை இழப்புக்கு உதவுகிறது. ஆனால் இவற்றின் நன்மைகளை ஒப்பிட்டு பார்க்கையில் பிளாக் காபியை விட கிரீன் டீ தான் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் கிரீன் டீயின் இலைகளில் அதிக ஆக்ஸிஜேனற்றிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் நீங்கள் இந்த இரண்டு பானத்திலும் எதை தேர்வு செய்தாலும் அதை அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம். ஏனெனில், அளவுக்கு அதிகமாக எதையும் எடுத்துக் கொண்டாலும் அது ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும்.

55
கிரீன் டீ மற்றும் பிளாக் காபி குடிக்க சிறந்த நேரம்:

கிரீன் டீ மற்றும் பிளாக் காபி இவை இரண்டிலும் காஃபின் உள்ளதால் ஒரு நாளைக்கு 2 கப்புக்கு மேல் நீங்கள் அதை குடிக்க கூடாது. மீறினால் தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும். இதுதவிர, இதயம் கூட பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளன. மேலும் இடை இழப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எடையை குறைக்க இந்த இரண்டு பானம் மட்டும் போதாது கூடவே ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் நல்ல தூக்கம் முக்கியம்.

Read more Photos on
click me!

Recommended Stories