நம்மில் பலரும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இன்னும் சிலரோ வெந்நீர் குடிப்பார்கள். அப்படி தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெந்நீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் தெரியுமா? வாருங்கள் இந்த பதிவில் அது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
28
செரிமானம் மேம்படும்
அமிலத்தன்மை, மலச்சிக்கல் பிரச்சனையால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால் தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெண்ணீர் குடியுங்கள். இதனால் செரிமானம் மேம்படுவது மட்டுமல்லாமல், உணவும் விரைவாக உடையும். செரிமானம் அமைப்பும் சீராக இயங்கும்.
38
எடை குறையும்
நீங்கள் எடையை குறைக்க விரும்பினால், ஒரு கிளாஸ் சூடான நீருடன் உங்களது நாளை தொடங்குங்கள். இது உங்களது உடலில் வெப்பநிலையை அதிகரிக்கும். இதனால் வளர்ச்சிதை மாற்றம் துரிதப்படுத்தப்படும். சூடான நீர் குடலில் உள்ள கொழுப்பு படிவங்களை உடைக்கும் மற்றும் கொழுப்பு சேர்வதையும் தடுக்க பெரிதும் உதவுகிறது.
தினமும் வெறும் வயிற்றில் சூடான நீர் குடித்து வந்தால் கடினமான கொழுப்புகளை உடைத்து உணவை எளிதாக ஜீரணமாக்கும். இது தவிர மலச்சிக்கல், வீக்கம் பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும் சாப்பிடும் முன் 1 கிளாஸ் சூடான நீரை குடித்தால் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுதல் அதிகரிக்கும்.
58
மன அழுத்தம் மற்றும் பதட்டம்
வெதுவெதுப்பான நீரானது பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை தூண்டி, உடலை ஓய்வெடுக்க உதவுகிறது. மேலும் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலைக் குறைத்து மனதுக்கு அமைதியை தருகிறது. உங்களுக்கு தெரியுமா.. தினமும் இரவு தூங்கும் முன் ஒரு கிளாஸ் சூடான நீரை குடித்து வந்தால் தூக்கத்தின் தரம் மேம்படும்.
68
மாதவிடாய் வலி குறையும்
மாதவிடாய் வலி ஏற்படும் போது சூடான நீரை குடித்தால் தசைகளை தளர்த்தும் மற்றும் பிடிப்புகளின் தீவிரத்தையும் குறைக்கும். மேலும் சூடான நீரானது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, வீக்கம் மற்றும் வலியை குறைக்க உதவுகிறது. அசெளகரியத்தையும் நீக்கும்.
78
சருமத்திற்கு நல்லது
உடலே நீரேற்றமாக வைத்துக் கொண்டால் பளபளப்பான சருமத்தை பெறலாம். சூடான நீர் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை தரும். மேலும் நச்சுக்களை வெளியேற்றி முகப்பரு, சுருக்கங்கள், தோல் விரிசல்கள் பிரச்சினையை நீக்கும்.
88
நச்சுக்களை வெளியேற்றும்
சூடான நீர் உடலில் இயற்கையான ஃப்ளஷ் சிஸ்டமாக செயல்படுகிறது. நீங்கள் சோம்பலாக உணர்ந்தாலோ அல்லது மலச்சிக்கல் பிரச்சனையை அனுபவித்தாலோ சூடான நீர் உங்களது வயிற்றை சில வாரங்களிலேயே கம்ப்ளீட் ஆக சுத்தம் செய்து விடும். அதாவது இது வியர்வையை தூண்டி, வியர்வை மூலம் நச்சுக்களை வெளியேற்றுகிறது. இது தவிர சிறுநீரக செயல்பாட்டிற்கும், உடலிலிருந்து தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெதுவெதுப்பான நீர் உதவுகிறது. மேலும் ஒரு கிளாஸ் சூடான நீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வந்தால் கல்லீரல் செயல்பாடு மேம்படும்.