ஒரே இடத்தில் ரொம்ப நேரம் உட்காருபவரா நீங்க? 40 நிமிட விதி பத்தி தெரியுமா?

Published : Apr 08, 2025, 05:02 PM IST

அமரும் நேரத்தை 40 நிமிடங்களாக குறைத்தால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இந்தப் பதிவில் காணலாம்.  

PREV
16
ஒரே இடத்தில் ரொம்ப நேரம் உட்காருபவரா நீங்க? 40 நிமிட விதி பத்தி தெரியுமா?

What Happens If Reduce Sitting Time By 40 Minutes : அண்மையில் வெளியான ஓர் ஆய்வில், தினமும் ஒரு மணிநேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதை தவிர்ப்பது முதுகுவலியை குறைக்கும் என தெரிய வந்துள்ளது. அதாவது 40 நிமிடங்களுக்கும் குறைவாகவே அமர வேண்டும். அதன் பிறகு கண்டிப்பாக எழுந்து ஒரு குறுநடையாவது போட வேண்டும். இப்படி செய்வது எதற்காக? இதை செய்யாவிட்டால் என்னாகும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

26
அமர்ந்த வாழ்க்கை முறை:

நீண்ட நேரம் அமர்ந்த வாழ்க்கை முறையால் இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. ஒருவர் ரொம்ப நேரம் உட்கார்ந்து இருப்பதால் உடலுக்கு இரத்த ஓட்டம் குறைக்கப்படுகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகரிப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒரே இடத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்திருப்பது உங்களுடைய மூட்டுகளை பலவீனமாக்கும். எலும்புகளின் அடர்த்தி குறையவும் வாய்ப்புள்ளது. நீங்கள் வெகு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, அதிலும் உங்களுடைய உடலை சரியான தோரணையில் வைத்திருக்காமல் மோசமான நிலையில் அமர்ந்திருந்தால் இடுப்பு பகுதியில் இறுக்கம் ஏற்படுகிறது. இதனால் முதுகு வலி ஏற்படும். 

36
மனச்சோர்வு:

ஒருவர் போதுமான உடல் செயல்பாடு இன்றி ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் பாதிப்பு தான்.  உடல் செயல்பாடு தான் மனநிலையை சீராக்கும் எண்டோர்பின்கள் சுரக்க காரணமாக அமைகிறது. இதனால் மனநிலை மேம்படும். நீங்கள் ஒரே இடத்தில் 40 நிமிடங்களுக்கும் மேலாக அமர்ந்திருப்பதால் மனச்சோர்வு நீங்காமல் மந்தமாகவே இருக்க வாய்ப்புள்ளது. 

46
உடல் பருமன்:

எந்த உடல் செயல்பாடுகளுமின்றி உட்கார்ந்த வாழ்க்கை முறையை கொண்டவர்களுடைய உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உடலில் எந்த இயக்கமும் இல்லாவிட்டால் குறைந்த கலோரிகள் தான் எரிக்கப்படும். இதனால் எடை அதிகரிக்கும். 

இதையும் படிங்க: குழந்தைங்க அமரும் 'பொசிஷன்' ரொம்ப முக்கியம்!! இப்படி உட்காந்தா கண்டிப்பா மாத்தனும்

56
40 நிமிடங்கள்:

நீங்கள் அமரும் நேரத்தை 40 நிமிடங்களாக குறைப்பதால் உடலுக்கு இரத்த ஓட்டம் சீராக அமையும். உயர் இரத்த அழுத்தம் குறைவதால் இதய பிரச்சினைகளின் ஆபத்தும் குறைகிறது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதுதான் எடையை கட்டுக்குள் வைக்க உதவும் தாரக மந்திரம். சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு இந்த 40 நிமிடங்களுக்கு ஒரு முறை எழுந்து நடப்பது, மற்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது உதவியாக அமையும். நாளடைவில் முதுகுவலி குறைவதை உங்களால் உணரமுடியும். 

இதையும் படிங்க:  உட்கார்ந்திருக்கும் போது கால் ஆட்டும் பழக்கம் உள்ளவரா? உடனே நிறுத்துங்க.. இல்லைன்னா அவ்வளவுதான்..!

66
உடற்செயல்பாடு:

அமர்ந்தநிலையில் மணிக்கணக்கில் இருக்காமல்  இடையிடையே உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். மனது புண்படாமல் இருக்கும். ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கு ஒருமுறையும் 5 முதல் 7 நிமிடங்கள கவனச்சிதறல் இன்றி நடந்தால் கவனம் சிதறாமல் இருக்கும். இது உங்களை புத்துணர்வாக வைக்கும். தினமும் டேபிள் டென்னிஸ் போன்ற ஏதேனும் விளையாட்டுகளை விளையாடலாம். வீட்டில் மட்டுமில்லை, அலுவலகத்தில் கூட 5 முதல் 10 நிமிடங்கள் குறுகிய போட்டி வைத்து கொண்டு விளையாடினால் உத்வேகமாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories