
How Your Nails Tell Your Health : நம்முடைய உடல் நமது ஆளுமை பற்றிய ரகசியங்களை சொல்லுகின்றன. அதுபோல உடம்பு சரியில்லை என்றால் நம் உடலானது ஏதாவது ஒரு விதத்தில் அதை வெளிப்படுத்திவிடும். அந்த வகையில் நம்முடைய நகங்களில் ஏற்படும் சில மாற்றங்கள் நம் ஆரோக்கியத்தில் சில நோய்களுக்கான அறிகுறிகள் என்று மருத்துவர்கள் சொல்லுகின்றனர். ஆம், நம் உடலில் ஏதாவது பெரிய நோய் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக நகங்களில் நிற மாற்றங்கள் ஏற்படும்.
ஆரோக்கியமான நகங்கள் பளபளப்பான நிறத்திலும், நுனி வெள்ளையாகவும் இருக்கும். இதுவே நகங்களில் நிறம் மற்றும் அதன் வடிவம் மாறிக்கொண்டே இருந்தால், ஆரோக்கியத்தில் பிரச்சனை இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் அது. இத்தகைய சூழ்நிலையில், நகங்களை பார்த்து ஒருவரின் ஆரோக்கியத்தை எப்படி கணிக்க முடியும் என்பதை குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உங்களது நகங்கள் வெளிறிப்போய் இருந்தால், அவை ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்த சோகை மற்றும் கல்லீரல் பிரச்சினை ஆகியவற்றிற்கான அறிகுறியாகும். எனவே நீங்கள் மருத்துவரை உடனே அணுகி அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.
நகத்தின் நடுவில் வெள்ளை:
உங்களது நகத்தின் நடுவில் வெள்ளையாகவும் விளிம்புகள் கருப்பாகவும் இருந்தால் அது கல்லீரல் பிரச்சனையை குறிக்கின்றது. மற்றொரு காரணம் என்னவென்றால், மஞ்சகாமாலை நோயின் அறிகுறி.
உங்களது நகங்கள் அடிக்கடி உடைந்து போனால் அல்லது பிளவுகள் ஏற்பட்டால் அது தைராய்டு பிரச்சனையின் அறிகுறி. மேலும் உடம்பில் போதிய ஊட்டச்சத்து இல்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுவே நகங்கள் உடைந்து போய் மஞ்சள் நிறத்துடன் இருந்தால்ழ் அது பூஞ்சை தொற்றுக்கான அறிகுறியாகும்.
விங்கிய நகங்கள்:
நகங்களை சுற்றி வீங்கி இருந்தாலும் அல்லது சிவத்து போய் இருந்தாலும் அது இணைப்பு திசு கோளாறு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: Nails White Spots : நகத்தில் வெள்ளை புள்ளி வருவது ஏன்..? ஏதேனும் நோயின் அறிகுறியா..?
உங்களது நகத்தில் கருப்பு கோடுகள் தென்பட்டால் உடனே மருத்துவரிடம் செல்வதுதான் நல்லது. ஏனெனில் இது சரும புற்றுநோயின் அறிகுறியாகும்.
நகத்தில் செங்குத்துக் கோடுகள்:
உங்களது நகத்தில் வரை வரையாக செங்குத்துக் கோடுகள் இருந்தால் அது உடல் எடை இழப்பு, கால் வீக்கம், அதிகப்படியான சிறுநீர் கழித்தல், அனிமியா வயதாகுதல் போன்ற பிரச்சனைகளின் அறிகுறி.
இதையும் படிங்க: Nail Cutting: இரவு நேரங்களில் ஏன் நகம் வெட்டக்கூடாது! ஏன் தெரியுமா?
நகங்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு முக்கிய காரணம் அதில் பூஞ்சை தொற்றுகள் இருப்பது தான் இதை நீங்கள் அசால்டாக விட்டால், பின்னாளில் நகங்கள் உடைந்து போகும் அல்லது தடிமனாக மாறிவிடும். மஞ்சள் நகங்கள் இருந்தால் அது தைராய்டு பிரச்சினை, நுரையீரல் பாதிப்பு, சோரியாசிஸ், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் இதற்கான அறிகுறியாகும்.
அரை நிலவு இல்லாமல் இருப்பது:
ஆரோக்கியமான நகம் இளஞ்சிவப்பு நிறத்திலும், நகத்தில் அடிப்பகுதியில் அரை நிலவும் போன்ற வெள்ளை வட்டமும் இருக்கும். அதுவே நகத்தில் அரைவட்டம் இல்லாமல் இருந்தால் அது ஊட்டச்சத்துக் குறைபாடு, தலை சுற்றல், பதட்டம், எடை இழப்பு மற்றும் எடை அதிகரிப்பதற்கான அறிகுறி.
நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருப்பது பொதுவானது. அதுவே உங்கள் நகம் முழுவதும் வெள்ளை புள்ளிகளாக இருந்தால் அது துத்தநாகக் குறைபாட்டை குறிக்கின்றது. மற்றொரு காரணம் ஒவ்வாமை மற்றும் பூஞ்சை தொற்று ஆகும்.
நகங்களில் குழி தென்பட்டால்:
நகங்கள் குழிக்குள் இருப்பது போல் இருந்தால் அது கீழ்வாதம் சொரியாசிஸ் போன்ற சிவப்பு கலந்த பிரவுன் நிறத்தில் மாறும்