Nail Cutting: இரவு நேரங்களில் ஏன் நகம் வெட்டக்கூடாது! ஏன் தெரியுமா?
இரவில் நகங்களை வெட்டக்கூடாது என்பதற்கு ஆன்மீக மற்றும் அறிவியல் காரணங்கள் உள்ளன. ஆன்மீக ரீதியாக, இது மகாலட்சுமியின் வருகையைத் தடுக்கிறது மற்றும் நிதி சிக்கல்களை உருவாக்குகிறது. அறிவியல் பூர்வமாக, இது தீய சக்திகளால் துஷ்பிரயோகம் செய்யப்படலாம்.
Nails Cutting
இரவு நேரத்தில் நகங்களை வெட்டக்கூடாது என்பதற்கு ஆன்மீக காரணமும் உண்டு, அறிவியல் காரணமும் உண்டு. ஆன்மீகப்படி மாலையில் நகம் வெட்டுவதால் வீட்டிற்கு மகாலட்சுமி வருவது தடைப்படும் என கூறப்படுகிறது. மாலை வேளையில் தான் லட்சுமி தேவி நம் வீட்டிற்குள் நுழைவதாக நம்பப்படுகிறது.
Cutting Nails
இதனால் வீட்டிற்கு செழிப்பும் செல்வமும் ஏற்படும். இரவில் கழிவுகளை அகற்றுவது லட்சுமிதேவியை அவமரியாதை செய்வது போன்றது. இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். ஆகவே இரவில் பணம் கடன் கொடுப்பது, நகம் வெட்டுவது, முடி வெட்டுவது, குப்பை கொட்டுவது போன்றவற்றை செய்யக்கூடாது.
இதையும் படிங்க: Aloe Vera Gel Lip Mask: ரோஜா இதழ் போல உதடுகளை மாற்றணுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!
Nails
ஏனென்றால் பில்லி, சூனியம் போன்ற தீய செயல்களுக்கு பெரும்பாலும் உடைந்த நகத் துண்டு அல்லது சம்பந்தப்பட்ட நபர் அணியும் சட்டை தேவைப்படுகிறது. எனவே, இரவில் நகங்கள் தரையில் விழுந்தால், தீய சக்திகள் அல்லது நமக்கு எதிராக சூனியம் செய்யும் நபர்கள் நம் நகங்களை சேகரித்து நமக்கு தீங்கு விளைவிப்பதற்காக அவற்றைப் பயன்படுத்தலாம் என்று நம்பப்பட்டது.