கிட்னி நம்முடைய உடலில் இருக்கும் ஒரு முக்கியமான உறுப்பு. சிறுநீரகங்கள் சேதமடைந்தால் முழு உடலும் பாதிக்கப்படும். அந்தவகையில், தற்போது பலரும் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால் அதன் அறிகுறி உடனே தெரியாது. தீவிரமடைந்த பிறகு தான் அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். இருப்பினும் சில அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் சிறுநீரக பாதிப்பை ஆரம்பத்திலேயே தடுத்துவிடலாம். இத்தகைய சூழ்நிலையில், சிறுநீரக பாதிப்படைந்தால் காலையில் சில அறிகுறிகள் தோன்றும் அவை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
24
முகம் வீங்குதல்..
முகம் வீக்கம் குறிப்பாக காலையில் இப்படி இருப்பது சிறுநீரக செயலிழப்பின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். அதாவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் உடலில் அதிகப்படியான சோடியம் மற்றும் நீரானது தேங்கி நிற்கும். இதனால் உடலில் திசுக்களில் திரவம் குவிவதற்கு இது காரணமாக அமையும். இந்த திரவமானது முகத்தில் குறிப்பாக கன்னங்களை சுற்றி குவிந்து வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே உங்களது முகம் நீண்ட காலமாக வீக்கமாக இருந்தால் அதை ஒருபோது புறக்கணிக்காதீர்கள். உடனே மருத்துவர் அணுகவும்.
34
காலை நேர குமட்டல் ...
சிறுநீரகள் சேதமடைந்தால் உடலில் யூரியா அளவு அதிகரிக்கும். மேலும் இது செரிமான மண்டலத்தில் குவிந்து காலை எழுந்ததுமே வாந்தி, குமட்டலை ஏற்படுத்தும். எனவே, நீண்ட களமாக நீங்கள் காலையில் வாந்தி, குமட்டல் பிரச்சினையை அனுபவித்தால் அதை புறக்கணிக்காதீர்கள். உடனே ஒரு மருத்துவர் அணுகுவது நல்லது.
காலையில் நீங்கள் நுரையுடன் கூடிய சிறுநீர் கழிக்கிறீர்கள் என்றால் அது சிறுநீர் பாதிப்பின் முக்கிய அறிகுறியாகும். அதுபோல அடர் மஞ்சள் அல்லது பழுப்பு போன்ற நிறத்தில் சிறுநீர் கழித்தால் அதுவும் சிறுநீரக பிரச்சனையை குறிக்கிறது. மேலும் சிறுநீரில் இரத்தம் வந்தால் அது சிறுநீர் பாதிப்பின் தீவிர அறிகுறியாகும்.
மேலே சொன்ன அறிகுறிகளை நீங்கள் கண்டால் உடனே மருத்துவர் அணுகி அதற்குரிய சிகிச்சையை எடுத்து, உங்களது கிட்னியை காப்பாற்றுங்கள்.