Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க

Published : Dec 13, 2025, 04:07 PM IST

லிப் பாம் வாங்கும் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

PREV
14
How To Choose A Lip Balm

லிப் பாம் என்பது பெண்கள் உதடுக்கு பயன்படுத்தும் ஒரு சரும பராமரிப்பு பொருளாகும். இது உதட்டை வறட்சியிலிருந்து நீக்கி ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும். ஆனால், லிப் பாம் வாங்கும் போது நாம் தெரியாமல் சில தவறுகளை செய்துவிடுகிறோம். அவை என்னென்ன? எனவே, லிப் பாம் வாங்கும் போது சில விஷயங்களை மனதில் வைத்து கொள்ள வேண்டும். அவை என்னென்ன இங்கு பார்க்கலாம்.

24
ஹைட்ரேட்டிங் பொருட்கள் :

லிப் பாம் வாங்கும் போது அதில் உதட்டை வறட்சியில் இருந்து நீக்கி மென்மையாக்கும் பொருட்கள் இருக்கிறதா என்று பார்க்கவும். அதாவது தேங்காய் எண்ணெய், ஷியா பசட்டர் ஆகியவற்றில் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்.

UV பாதுகாப்பு

முகத்தை சூரிய கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்க சன் ஸ்கிரீன் பயன்படுத்துகிறோம். அதுபோல உதட்டையும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பது மிகவும் அவசியம். எனவே, நீங்கும் லிப் பாம் வாங்கும் போது அதில் SPF இருக்கிறதா என்று சரிப்பார்த்து வாங்குங்கள்

34
செயற்கை வாசனை :

லிப் பாம் வாங்கும் போது அதில் செயற்கையாக சேர்க்கப்பட்ட வாசனை திரவியங்கள் அதாவது சென்ட் வகைகள் இருக்கிறதா என்று பார்க்கவும். அப்படி சேர்க்கப்பட்டிருந்தால் அதை வாங்க வேண்டாம். அவை உதட்டை மோசமாக பாதிக்கும்.

இயற்கை பொருட்கள் :

நீங்கள் வாங்கும் லிப் பாம் அதில் இயற்கை பொருட்கள் இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும். இரசாயனங்கள் கலந்த பொருட்கள் உள்ள லிப் பாமை உதட்டில் பயன்படுத்தினால் அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

44
நீண்ட நேரம் இருக்கிறதா?

நீண்ட நேரம் இருக்கும் லிப் பாமை வாங்கி பயன்படுத்துங்கள். ஏனெனில் அடிக்கடி லிப் பாமை பயன்படுத்த முடியாது. எனவே எப்போதுமே நீண்ட இருக்கும் லிப் பாமை வாங்குங்கள். அதுதான் 24 நேரமும் இருக்கும். நீண்ட நேரம் இருக்கும் லிப் பாமை பயன்படுத்தினால் உதட்டை ஈரப்பதமாக வைக்கும்.

புத்துணர்ச்சி தரும் பொருட்கள் :

லிப் பாமில் புத்துணர்ச்சி தரும் பொருட்கள் இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும். குறிப்பாக ரோஸ் ஆயில், பெர்ப்ர்மிண்ட் ஆகியவை சேர்க்கப்பட்டிருந்தால் அவை உதட்டை குளிர்ச்சியாக வைக்கவும். எனவே, அதை வாங்கி பயன்படுத்துங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories