Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி

Published : Dec 12, 2025, 01:50 PM IST

கால் பாதங்களில் அதிகமாக வியர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் அதை தடுப்பது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

PREV
17
Excessive Foot Sweating

பொதுவாக சிலருக்கு கால்களின் பாதங்கள் அதிகமாக வியர்த்துக் கொண்டே இருக்கும். இந்த வியர்வை காரணமாக காலணிகளை கழற்றும் போது காலில் இருந்து துர்நாற்றம் வீசும். இது சுற்றி உள்ளவர்களுக்கு அசெளகரிய உணர்வை கொடுக்கும். கால் பாதங்களில் இப்படி அதிகமாக இருப்பதற்கான காரணங்கள் மற்றும் அதை தடுக்கும் சில வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

27
கால் பாதங்கள் அதிகமாக வியர்ப்பதற்கான காரணங்கள் :

ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், தைராய்டு பிரச்சனை, நரம்பியல் பிரச்சனை, பதட்டம், மன அழுத்தம் போன்றவற்றின் காரணமாக கால் பாதங்கள் குளிர்ந்து அதிக வியர்வை ஏற்படுத்துகிறது.

37
கால் பாதங்களில் வியர்வை ஏற்படுவதை தடுக்க சில வழிகள் :

கால் பாதங்களை சுத்தமாக வை :

கால் பாதங்களை எப்போதுமே சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். எனவே தினமும் கால்களை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக வெளியில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் பாதங்களை சோப்பு போட்டு கழுவும் மறக்காதீர்கள். அதுபோல கால் விரல்களுக்கு இடையே ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். உங்கள் கால் பாதங்களில் அடிக்கடி வியர்த்துக் கொண்டே இருந்தால் பாதத்தை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் வியர்வையை கட்டுப்படுத்த முடியும்.

47
இறுக்கமான காலணிகள் வேண்டாம்!

சில சமயங்களில் சிலருக்கு இறுக்கமான காலணிகள் அல்லது ஷூக்களை அணிந்தால் கூட பாதங்களில் அதிகமாக வியருக்கும். எனவே லேசான காலணிகளை அணியவும். அதுவும் காற்றோட்டமாக இருக்கும் படி பயன்படுத்தவும். லெதர் மற்றும் லேசான மெட்டீரியலான காற்றோட்டமான ஷூக்களை அணிந்தால் பாதங்களில் அதிக வியர்வை ஏற்படுவதை தடுக்க முடியும்.

57
காட்டன் சாக்ஸ் :

உங்களுக்கு கால் பாதங்கள் அதிகமாக வியர்க்கிறது என்றால் நீங்கள் வியர்வையை உறிஞ்சும் தன்மை கொண்ட சாக்ஸை பயன்படுத்துவது நல்லது. இதற்கு காட்டன் சாக்ஸ் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் இது பாதங்களில் இருக்கும் வியர்வையை சுலபமாக உறிஞ்சும்.

67
எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் :

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதை கால் பாதங்களில் நன்கு தேய்க்க வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் பாதங்களில் அதிகமாக வியர்வை சுரப்பது கட்டுப்படுத்தப்படும்.

77
ஆப்பிள் சைடர் வினிகர் :

ஒரு வாளி தண்ணீரில் கொஞ்சமாக ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து அதில் உங்களது கால்களை சுமார் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஆப்பிள் சைடர் வினிகரில் இருக்கும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உங்கள் கால் பாதங்களில் உண்டாகும் வியர்வை மற்றும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.

Read more Photos on
click me!

Recommended Stories