
நடைப்பயிற்சி அனைத்து வயதினருக்கும் சிறந்த நன்மைகளை தரும் என்றாலும், வயதானவர்கள் நடைபயிற்சி செய்வது குறிப்பிடத்தக்க நன்மைகளை கொண்டுள்ளது. உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள வாக்கிங் சிறந்த பயிற்சியாகும் இது நாள்தோறும் வழக்கமாக செய்யப்படும் போது தசைகள் வலுப்படுகின்றன இதயம் தொடர்பான நோய்கள் பக்கவாதம் பெருங்குடல் புற்றுநோய் சர்க்கரை வியாதி ஆகின்றி வருவதை தடுக்கவும் ஏற்கனவே இந்த நோய்கள் இருந்தால் அதை கட்டுக்குள் வைக்கவும் நடைபயிற்சி உதவுகிறது எலும்புகளை வலுப்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ், ஆர்த்ரோசிஸ் வராமல் தடுக்கிறது.
தினமும் நடைபயிற்சி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தால் 45 வயதிற்கு மேல் இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் பாதியாக குறைக்கப்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் அதனை கட்டுக்குள் கொண்டு வர தினமும் நடைபயிற்சி செய்யலாம். வயதான காலத்தில் சமநிலையின்மையால் ஏற்படும் தடுமாற்றத்தைத் தடுக்கவும், உடலை சமநிலையாகவும் ஒருங்கிணைப்போடும் செயல்பட வைக்கவும் நடைபயிற்சி உதவுகிறது. மனசோர்வை நீக்கி மனநிலையை மேம்படுத்த நடைபயிற்சி சிறந்த ஒன்றாக உள்ளது. உங்களுடைய மூட்டுகளை வலுப்படுத்தி உடலின் சகிப்புத்தன்மையை அதிகப்படுத்த தினமும் நடக்கலாம். ஒரு ஆய்வில் தினந்தோறும் நடைப்பயிற்சி செய்யாதவர்களுக்கும், நடைபயிற்சி செய்தவர்களுக்கும் இருந்த வேறுபாடு கண்டறியப்பட்டது. அதில் நடைபயிற்சி செய்தவர்களின் ஆயுள் அதிகம் நடக்காதவர்களை விட அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது
வயதானவர்கள் வீட்டிற்குள்ளே இருப்பதால் அவர்களுக்கு மனச்சோர்வு அதிகமாகும். அதுவே வெளியிலே சென்று தெரிந்தவர்களுடன் பேசி பழகுவது மனநிலையை மேம்படுத்தும். வயதாகும் போது தன்னிச்சையாக செயல்பட முடியாது என்ற எண்ணம் தோன்றலாம். தினமும் நடக்க செல்லும்போது சுதந்திரமாக தன்னால் வாழ முடியும் என்ற நம்பிக்கை கிடைக்கும். மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நடப்பதும், வீட்டில் உள்ள தங்களுக்கான வேலைகளை அவர்களை செய்யவும் தேவையான நம்பிக்கையை நடைப்பயிற்சி வயதானவர்களுக்கு கொடுக்கிறது.
வயதாகும்போது சில உடற்பயிற்சிகளை செய்வது கடினமாக இருக்கும். ஆனால் அன்றாடம் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை கொண்டிருப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். கடினமான உடற்பயிற்சி செய்வதற்கு பதிலாக தினமும் நடப்பது வயதானவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. 65 வயதிற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் தினமும் குறைந்தபட்சம் மிதமான வேகத்தில் 30 நிமிடங்கள் நடப்பது நல்லது என ஆஸ்திரேலிய உடல் செயல்பாடு மற்றும் அமர்ந்த நடத்தை வழிகாட்டுதல் (Australian Physical Activity and Sedentary Behaviour Guidelines) பரிந்துரைக்கிறது.
வயதானவர்கள் நடக்கும் போது வேகமாக நடக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒரே வேகத்தில் சீராக மெதுவாக நடக்கலாம். தினமும் ஒரே மாதிரியான நடைபயிற்சி செய்யாமல் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் படிக்கட்டில் ஏறி இறங்குவது, மலைகளுக்கு செல்வது போன்றவற்றையும் பழக்கப்படுத்தலாம்.
இதையும் படிங்க: வாக்கிங் வயசுக்கு ஏத்த மாதிரி போகனும்.. 60 வயசுக்கு மேல 'இவ்ளோ' ஸ்டெப்ஸ் நடந்தாலே ஆரோக்கியம் தான்!!
நடப்பதற்கு முன்பு வார்ம் அப் என சொல்லப்படும் உடலை நடைபயிற்சிக்கு தயார் செய்யும் சில பயிற்சிகளை செய்வதையும் வழக்கப்படுத்த வேண்டும். இதற்கு உங்களுடைய மருத்துவரிடம் பரிந்துரை பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் நீண்ட காலமாக எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் திடீரென கடினமான பயிற்சி செய்ய நினைத்தால் நிச்சயமாக இதை பின்பற்ற வேண்டும். ஏனென்றால் இது உங்களை சுளுக்கு, தசைப்பிடிப்பில் இருந்து பாதுகாக்கும்.
இதையும் படிங்க: வாக்கிங் போகாமல் வெறும் '15' நிமிடங்கள் இதை செய்தால் எடை தானாக குறையும்!!
வயதாகும் போது சில நோய்கள் வருவது இன்றைய காலகட்டத்தில் சாதாரணமாகிவிட்டது. ஏற்கனவே உங்களுக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து விட்டு நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். அதற்கு ஏற்றபடி உணவு பழக்கத்தையும் பின்பற்றுங்கள். இதனால் உங்களுடைய உடல் ஆரோக்கியம் முன்பு இருந்ததை விட பல மடங்கு மேம்படும் வாய்ப்புள்ளது.