ஜாதிப்பத்திரி முந்தைய காலங்களில் நறுமணப்பயிராக இருந்தது. அப்போது வர்த்தகத்திலும் சிறந்து விளங்கியது. உருண்டை வடிவம், பார்ப்பதற்கு எலுமிச்சை அளவில் இருக்கும் ஜாதிக்காய்கள், தடிமனான மேல் தோடு, உள்ளிருக்கும் கொட்டை, அதைச் சுற்றி பூ மாதிரி இருக்கும் ஜாதிப்பத்திரி முறையே 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஜாதிக்காயை பொறுத்தவரை அதன் மேல்தோடுகளுக்கு கிராக்கி இருப்பதில்லை. ஜாதிப் பத்திரியும், அதன் கொட்டையும் தான் நல்ல விலை கொண்டவை. ஜாதிக்காய் கொட்டை, ஜாதிப்பத்திரி இரண்டிலும் மருத்துவக் குணங்கள் அதிகம் உள்ளது. இதில் ஜாதிபத்திரி மருத்துவ நன்மைகளை இங்கு காணலாம்.