Cloves Benefits : உடல் ஆரோக்கியம் காக்க ரெண்டே ரெண்டு கிராம்பு போதும்!

First Published Sep 19, 2022, 11:43 AM IST

சமையலறையில் இடம்பெறும் பொருள்களில் மிக முக்கியமானது கிராம்பு‌. இது, ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும், உணவுக்கு தனி சுவையைத் தருகிறது. தினமும் காலையில் கிராம்பை சாப்பிட்டு வந்தால், பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். வெறும் வாயில் சாப்பிட முடியவில்லை எனில் தண்ணீரில் கொதிக்க வைத்து, தேன் கலந்தும் குடிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
 

நோய் எதிர்ப்புச் சக்தி

கிராம்பில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. இது உடலில் இரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த் தொற்றுக்கு எதிராகவும் போராடுகிறது.

செரிமானம்

ஆரோக்கிய வாழ்க்கைக்கு, செரிமான மண்டலம் சீராக இயங்க வேண்டியது அவசியம். கிராம்பு அதனை செய்ய வல்லது. செரிமான பிரச்சினைகளை தீர்த்து வைக்கும். செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரித்து, மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகளைத் தடுக்கிறது. கிராம்பில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.

Yoga : மனம் வலுப்பெற, உடல் எடைக் குறைய உதவும் யோகாசனங்கள்!

கல்லீரல் ஆரோக்கியம்

உடலின் நச்சுத்தன்மையை நீக்க கல்லீரல் உதவுகிறது. நாம் உட்கொள்ளும் மருந்துகளை மெட்டபாலிசம் செய்கிறது. ஆகவே, கல்லீரலின் செயல்பாட்டை ஆரோக்கியமாக்க, தினந்தோறும் கிராம்பு சாப்பிடுவது நன்மை அளிக்கும்.

பற்களுக்கும் கிராம்புக்கும் அதிகத் தொடர்புண்டு. கிராம்பு உண்பதால் பல் வலி குறைகிறது. பல் வலி, ஈறுகளில் வலி இருந்தாலும் அவ்விடத்தில் கிராம்பு வைத்தால் வலி குணமாகும் என்று கூறுவர்.

Nandu Recipe : நாக்கில் எச்சில் ஊறும் சுவை ''செட்டிநாடு நண்டு குழம்பு'' செய்வது எப்படி?

வாய் கிருமிகளை நீக்கும்

தினமும் காலையில் 2 கிராம்புகளை வாயில் போட்டு அப்படியே வைத்திருந்தால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை நீக்கி விடும்.

இட்லி தோசைக்கு மாற்றாக ஹெல்த்தியான பிரேக் பாஸ்ட்! இப்படி செஞ்சு பாருங்க. கொஞ்சம் கூட மீதம் இருக்காது.


எலும்புகளுக்கு வலிமை

கிராம்பில் ஃபிளாவனாய்டுகள், மாங்கனீஸ் மற்றும் யூஜெனோல் உள்ளது. இவை எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கிராம்பு உட்கொள்வது எலும்புக்கு உறுதி அளிப்பதோடு,
சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும்.

click me!