இதுவரை கரண் ஜோஹரின் காஃபி வித் கரண் நிகழ்ச்சி வரலாற்றில் இல்லாத ஒரு அம்சமாக, பல்வேறு ரசிகர்கள் போன் மூலமாக இணைந்து விருந்தினர்களுடன் உரையாடினர். அப்போது வருண் தவனிடம் பேசிய பலர், தங்களுடைய பாலியல் பிரச்னை மற்றும் மனைவியின் விருப்பு வெறுப்பு குறித்து கேள்விகளை எழுப்பினர். அதற்கு வருண் தவன் தன்னுடைய அனுபவத்தை கொண்டு, பதில் கூறினார். ஒருவர், “திருமணத்தில் எப்படி மசாலா சேர்ப்பது” என்று கேட்டார். அதற்கு நீங்கள் உங்கள் மனைவியுடன் எத்தனை முறை உடலுறவு கொள்கிறீர்கள்? என்று பகீர் கிளப்பிய வருண், அஸ்வகந்தா என்கிற வேரை உட்கொள்ளுங்கள், உங்களுடைய செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று எடுத்துக் கூறினார்.
மற்றொருவர் பாலியல் உறவு சலித்துவிட்டதாக கூறினார். அதற்கு பதிலளித்த வருண் தவன், படுக்கையறையில் மனைவியுடன் ரோல்பிளேவில் ஈடுபட பரிந்துரைத்தார். அதற்கு ரோல்பிளே என்றால் என்ன என்று அழைப்பாளர் கேட்க? வருண் தவன், நிகழ்ச்சித் தொகுப்பாளர் கரண் ஜோஹர் போல உடையணிந்து மனைவியை தனிமையில் சந்தியுங்கள். அதை தொடர்ந்து நடப்பது தான் ரோல்பிளே என்று விளக்கமாக கூறினார். இதற்கு அரங்கத்தில் சிரிப்பொலி எழுந்தது. தொகுப்பாளர் கரண் ஜோஹர் விழுந்து விழுந்து சிரித்தார்.
படுக்கையறையில் உற்சாகமாக பிறக்க எளிய உணவுப் பழக்கங்கள் போதும்- முழு விபரம் இதோ..!!
காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பாலியல் பிரச்னைகளுக்கு விளக்கமாகவும் நேரித்தியுடனும் வருண் தவன் பதில் கூறி வந்ததை கவனித்த தொகுப்பாளர் கரண் ஜோஹர், “ நீ என்ன செக்ஸ் குருவா?” என்கிற கேள்வியை எழுப்பினார். அதற்கு பொறுப்புடன் விடை கூறிய வருண், “எனக்கு ஒரு நல்ல மனைவி இருக்கிறாள், அதனால் எனக்கு உருப்படியாக பதில் கூற முடிகிறது. இது மிகவும் இயற்கையான விஷயம் தான். இப்படி விசித்திரமாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. நான் திருமணமானவன், அதனால் நான் வெளிப்படையாக பேசுகிறேன்” என்று மிகவும் எதார்த்தமாக கூறினார் வருண் தவன்.
காய்ச்சலுக்கு ஆண்டிபயாடிக் சாப்பிடும் போது மது அருந்தலாமா?
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான ஆலியா பட்டும் வருண் தவனும் காதலித்து வருவதாக புரளி கிளம்பியது. அப்போது காஃபி வித் கரணின் முந்திய சீசனில் கலந்துகொண்ட வருண் தவனிடம் இதுதொடர்பாக கேட்கப்பட்டது. ஆனால் ஆலியா தனக்கு சகோதிரி போன்றவர் என்று கூறி, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வருண் தவன். இந்நிலையில் கடந்தாண்டு தனது நீண்ட நாள் காதலியான நடாஷா வருண் தவன் மணந்துகொண்டார். அதேபோல நடப்பாண்டில் முன்னணி பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை ஆலிய பட் திருமணம் செய்துகொண்டார்.