படுக்கையறையில் உற்சாகமாக பிறக்க எளிய உணவுப் பழக்கங்கள் போதும்- முழு விபரம் இதோ..!!
உடலுறவு கொள்வதால் உடலுக்கு மட்டும் இன்பம் கிடையாது. மனநிலையும் சிந்தனையும் அமைதி பெறும். அதை தாண்டி, காதலர்களுக்கு இடையே காதலை அதிகரிக்கும். அதன்காரணமாக கணவனும் மனைவியும் வாரத்துக்கு ஒருமுறையாவது உறவு வைத்துக் கொள்வதை கடைப்பிடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருத்து கூறுகின்றனர். எனினும் ஒரு சிலருக்கு பாலியல் மீதான ஈடுபாடு குறைந்து காணப்படுகிறது. இதனால் அவர்களுடன் இணைந்து வாழும் துணையும் சிக்கலை சந்திக்க நேரிடுகிறது. துணையின் ஆசையை நிறைவேற்றுவதற்கு பல கணவன்மார்களும் மனைவிமார்களும் போராடினாலும், இதுகுறித்து வெளியில் பேசி ஆலோசனை பெறுவதற்கு அவர்களிடம் தயக்கம் காணப்படுகிறது. இப்படியொரு சிக்கலை சந்திப்பவர்களுக்கு எளிய வழியில் பிரச்னையை சரிசெய்வதற்கான வழிகுறைகள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. குறிப்பிட்ட சில உணவுப் பழக்கங்களை உருவாக்கிக்கொள்வதன் மூலமாக பாலியல் சுகம் முழுமடையும். அதுகுறித்த விவரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
எண்ணெய்
குறிப்பிட்ட சில எண்ணெய் வகைகளை உணவில் சேர்த்து வருவதன் மூலமாக உடலுறவு மீதான ஈடுபாடு அதிகமாகிறது. குறிப்பாக ஆலிவ் விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய் கருத்தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். ஆலிவ் எண்ணெயில் சமைக்க வேண்டிய பொருட்கள் என்று உண்டு. அதை சேர்த்து சமைக்கும் போது, பயன் மேலும் கிடைக்கிறது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் பச்சை நிற ஆலிவ் எண்ணெய் ஆண்களுக்கு பாலியல் மீதான ஈடுபாட்டை அதிகமாக்குகிறது. அதேபோன்று பெண்களுக்கு கருப்பு நிற ஆலிவ் எண்ணெய் பயன் தருகிறது.
வெங்காய தோல்
தமிழ் மொழியில் எதற்கும் பயன்தராத விஷயங்களையும் ஆட்களையும் வெங்காயம் என்று சொல்லும் வழக்கம் உள்ளது. காரணம் வெங்காயத்தை உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது. அதனால் தான் அப்படியொரு சிறப்பு வெங்காயத்துக்கு வழங்கப்படுகிறது. ஆனால் வெங்காயத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள் எண்ணிலாடங்காதவை. பாலியல் பிரச்னைகளுக்கும் வெங்காயம் பல்வேறு உபாயங்களை வழங்குகின்றன. இதை ஒரு தேக்கரண்டி தேனுடன் தினமும் குடித்து வந்தால், உடலுக்கு வலு கிடைக்கும். இதனால் பாலியல் செயல்பாடுகள் திருப்திகரமாக அமையும்.
பத்தியம் இருக்கும்போது பூண்டு மற்றும் வெங்காயம் தவிர்க்கப்படுவது ஏன்?
சிட்ரஸ் கொண்ட பழங்கள்
வைட்டமின் சி சத்து கொண்ட ஆரஞ்சு மற்றும் எலுமிச்சம் பழங்களும் பாலியல் பிரச்னைகளுக்கு தீர்வு தரக்கூடியவை தான். இதனுடைய பலன்கள் வெறும் பாலியல் உறுப்புகளை பாதுகாப்பாது என்றுமட்டுமில்லாமல், பாலியல் சார்ந்த செயல்பாடுகளுக்கும் ஊக்கப்படுத்தும். அதாவது சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சத்தை உணவுகளில் சேர்த்து வருவதன் மூலம், உங்களுடைய துணையுடன் உணர்வு ரீதியான பிணைப்பு அதிகரிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
காய்ச்சலுக்கு ஆண்டிபயாடிக் சாப்பிடும் போது மது அருந்தலாமா?
வாழை மற்றும் பேரீச்சை
உங்களுடைய மிகவும் செயலாக்கத்துடன் வைத்திருக்க வாழைப் பழங்கள் பெரிதும் பயன்படுகின்றன. இதிலிருக்கும் ப்ரோமெலின் என்கிற சத்து, ஆண்களின் பிறப்புறுப்பை துடிப்புடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் இருப்பதால், ஆண்களுக்குரிய டெஸ்டோஸ்டீரோன் சுரபி அதிகம் சுரக்கும். அதேபோன்று ஆண்களுக்கான பாலியல் பிரச்னைக்கு பேரீச்சைப் பழங்களும் சிறந்த தீர்வாக அமைகின்றன. அதற்கு பேரீச்சையை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வரவேண்டும். இதன்மூலம் உடலில் இரும்புச் சத்து அதிகரித்து, பெண்களுக்கு அண்டவிடுப்பு காலம் வரும்போது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.