ஒரு வாரம் தொடர்ந்து திரிகோணாசனம் செய்வதன் மூலம், கொழுப்பு கரைந்து,பருமனான உடல் தோற்றம் மாறும். மேலும் இதை தினமும் செய்ய செய்ய உங்கள் விருப்படி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும்.
ஸ்டெப் 1:
திரிகோணாசனம் செய்வதற்கு முதலில் நாம் இரு கால்களையும் பிரித்து நேராக நிற்க வேண்டும். இப்போது 2 கால்களிலும் உங்கள் உடல் எடை சமமாக இருத்தல் வேண்டும்.
ஸ்டெப் 2:
அடுத்தாக இடக் கையை மெதுவாக மேலே உயர்த்தி, வலக் கையால் கால்களை தொட வேண்டும். 2 கைகளும் நேர்கோட்டில் வருமாறு மெதுவாக தரையில்இறக்க வேண்டும்.
ஸ்டெப் 3:
பின் மறுபுறத்தில் இருந்து அதே போன்று செய்து இடக் கையை கீழே எடுத்து, வலக் கையை மேலே எடுக்க வேண்டும். இவ்வாறு முதல் இரண்டு நாட்களுக்கு 25-50 முறை செய்ய ஆரம்பித்து பின் தினமும் 100 முறை வரை செய்து வரலாம்