இன்றைய அவசர வாழ்க்கை முறையில் குறுகிய கால இன்பங்களுக்காக பலர் தவறான பழக்கங்களுக்கு ஆளாகிவிடுகின்றனர். சிலர் மொபைலில் சில விஷயங்களைப் பார்த்து உற்சாகமடைந்து, அந்த உற்சாகத்தை நீட்டிக்க சுயஇன்பம் செய்கின்றனர். அதில் கிடைக்கும் சிற்றின்பம் அவர்களை மீண்டும் மீண்டும் செய்ய தூண்டுகிறது. சுயஇன்பம் தவறல்ல. ஆனால் அதை அடிக்கடி செய்வது ஒருவித அடிக்ஷன். இதனால் ஏற்படும் தீமைகள் தெரியுமா?
அதிகமாக சுயஇன்பம் செய்பவர்கள் சோர்வாக காணப்படுவார்கள். அதிகப்படியான சுயஇன்பத்தால், நம் உடலில் இருக்கும் மொத்த சக்தியும் விரயமாகிவிடும். இதனால் மற்ற வேலைகளை செய்ய உடலில் ஆற்றல் பற்றாக்குறை ஏற்படும். சோர்வும் பலவீனமும் ஆட்டிப்படைக்கும்.
எவ்வளவு பெரிய மனக்கவலையாக இருந்தாலும் சுயஇன்பம் செய்வதால் கொஞ்சம் கவனம் திசை திரும்பும். அந்த சோர்வால் நல்ல தூக்கம் வரும் என சொல்லப்படுகிறது. ஆய்வுகள் சுயஇன்பம் மன அழுத்தத்தை குறைப்பதாக கூறினாலும், இந்த பழக்கத்தால் மன அழுத்தம் அடைபவர்களும் இருக்கிறார்களாம். ஏனெனில் சிலர் அடிக்கடி சுயஇன்பம் செய்வதால் அடிமையாகிவிடுகிறார்கள். இதனால் பிற பணிகளை செய்ய முடியாமல் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.