என்கிட்ட ஓரல் செக்ஸ் கேட்குறார்.. பதிலுக்கு அவர் எதுவும் பண்றதில்ல.. ஒரு பெண்ணின் மனக்குமுறல்..

First Published | Mar 9, 2023, 4:07 PM IST

தனது வேலைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் கணவர் மீது மனைவிக்கு வரும் எண்ணங்கள் குறித்து இங்கு காணலாம். 

தாம்பத்தியம் ஒருவரால் மட்டுமல்ல இருவரால் இயங்கக் கூடிய உறவு. இந்த உறவில் கணவன் தன் மனைவியிடம் நேரம் செலவழிக்காமல் போனால் என்னாகும்? பின்வரும் வாசகியின் கேள்வி மூலம் அறியலாம். 

கேள்வி: "எனக்கு 34 வயது. திருமணமாகி எனக்கு ஒரு மகனும் இருக்கிறான். என் கணவருக்கும் எனக்கும் சில விஷயங்கள் ஒத்துவரவில்லை. திருமண உறவில் இப்போதெல்லாம் நான் மகிழ்ச்சியாக இல்லை. என் கணவர் என் மீது அன்பு காட்டுவதில்லை என தோன்றுகிறது. நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். அவருடன் நேரம் செலவழிக்க விரும்புகிறேன். அதுவே எனக்கு மகிழ்ச்சியும் அளிக்கிறது. ஆனால் என் கணவர் எப்போதும் வேலைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார். குடும்பத்திற்கு என்று கொஞ்ச நேரம் ஒதுக்கினால் போதும் என்று நினைக்கிறார். அதிலும் மனைவியான எனக்கு நேரம் கொடுப்பதில்லை. எனக்கு அவரிடம் எந்த முக்கியத்துவமும் இருப்பதில்லை.

நான் எவ்வளவு வேலை செய்தாலும் அவர் கண்ணுக்கு தெரிவதில்லை. வீட்டு வேலைகளை செய்வதை சொன்னால் கிண்டல் செய்து சிரிக்கிறார். நான் சோம்பேறியாக இருப்பதாக என் கணவர் சொல்லி காட்டுகிறார். இது போதாதென்று பாலியல் உறவிலும் எனக்கு திருப்தியில்லை. என் கணவர் பெரும்பாலும் வாய்வழி உறவை மட்டுமே விரும்புகிறார். பதிலுக்கு எனக்காக எதையும் செய்ய விரும்பவில்லை. அவருக்கு வாய்வழி செக்ஸ் கொடுப்பதில் எனக்கு கவலையில்லை. 

Tap to resize

ஆனால் அதற்கு பிறகு உடலுறவு கொள்வதை நான் விரும்புகிறேன். அதுமட்டுமின்றி அடிக்கடி உடலுறவு கொள்ளவும் விரும்புகிறேன். ஆனால் அவர் இரவு வெகுநேரம் வேலை செய்கிறார். வார இறுதி நாட்களில் அதிகாலை 2-3 மணி வரை கூட வேலைதான். என்னை கவனிப்பதே இல்லை. இந்த விஷயங்களுக்காக நான் நிறைய பேசி பார்த்தேன். ஆனால் எங்களுக்குள் சண்டை தான் வருகிறது. இதனால் என் மீது அவருக்கு அன்பு இல்லை, அக்கறை இல்லை என்பது போன்ற எண்ணங்கள் தோன்றுகின்றன நான் என்னதான் செய்ய வேண்டும்"என்கிறார் வாசகி. 

நிபுணரின் பதில்: அன்புள்ள வாசகிக்கு, எல்லா திருமண உறவும் நம்பிக்கை, உரையாடல், பாசம், உணர்வுகள், உடல் நெருக்கம் போன்றவைகளால் ஆனது. சில நேரங்களில் உங்கள் உணர்வுகள் நீங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் வெளிப்படுத்தப்படாமல் இருக்கலாம். இது மாதிரி நேரங்களில் உறவைத் தக்கவைத்துக்கொள்ள துணை கொஞ்சம் மெனக்கெட வேண்டும். நீங்களும் முடிந்தவரை உங்கள் துணைக்காக முயற்சி செய்து இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. இங்கும் சில பரிந்துரைகளை உங்களுக்காக வழங்குகிறோம். 

செய்யும் வேலையை மதிக்கும் நபர்கள் பரிபூரணவாதிகள். நீங்கள் அவருக்கு இதை நினைவுபடுத்த வேண்டும்; ஒரு இல்லத்தரசியாக நீங்கள் செய்யும் வேலை, உங்கள் குடும்பம் நிம்மதியாக இருப்பதை உறுதி செய்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வீட்டு வேலை செய்வதை உங்கள் கணவர் பொருட்டுப்படுத்தவில்லை என்பதை அனுசரித்து போக வேண்டாம். இந்த விஷயத்தில் உங்களை கிண்டல் செய்யவோ, அவமானப்படுத்தவோ விடாதீர்கள். 

தேவையில்லாமல் உங்களை நோக்கி வரும் கடுமையான விமர்சனங்களை எதிர்த்து நிற்க முயற்சி செய்யுங்கள். உங்கள் சுய மதிப்பை அடிக்கடி நினைத்து கொள்ளுங்கள். இப்படி செய்வதால் உங்கள் தன்னம்பிக்கை அதிகமாகும். உடலுறவு என்பது இருவர் சம்மதித்து உற்சாகமாகவும், மகிழ்ச்சியுடனும் செய்யக்கூடிய செயலாகும். உங்கள் கணவருடன் உங்களுடைய செக்ஸ் தேவைகள் குறித்து பேச முடிந்தால் அதை முயற்சி செய்து பாருங்கள்.

வெவ்வேறு முறைகளில் உறவு கொண்டால் தாம்பத்தியத்தில் ஈடுபாடு அதிகமாகும். பிரச்சனைகளை பேசி, நீங்கள் இருவரும் இணைந்து சுமுகமான முடிவுக்கு வாருங்கள். இந்த விஷயத்தில் மேலும் ஆலோசனைகள் தேவையெனில் தம்பதிகள் ஆலோசகரை அணுகவும். 

இதையும் படிங்க: கணவரை ஈஸியா ஏமாத்தி கள்ள உறவு கொள்ளும் பெண்கள்.. கையும் களவுமா மாட்டிக்கிட்டா இதை சொல்லி தப்பிச்சுடுறாங்க..!

Latest Videos

click me!