கோடை வெயிலில் நீரிழப்பு என்பது பொதுவான அதே நேரத்தில் மோசமான ஒன்றும் கூட. இதனால் ஏற்படும் பாதிப்பில் மிக முக்கியமானதெனில் சிறுநீரக தொற்றுகள் மற்றும் சிறுநீரக நோய்கள். நாள்பட்ட சிறுநீரக பிரச்சனை இல்லாதவர்களும் இந்த கோடைக்காலத்தில் அதிக கவனத்துடன் இருத்தல் அவசியம்.
கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தினால் பலருக்கும் பல்வேறு உபாதைகள் ஏற்படும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் சிறுநீரக பிரச்சனைகள் உண்டாகும். கோடை நேரத்தில் சிறுநீரக பிரச்சனையை சந்திக்காமல் எவரும் இருக்க மாட்டார்கள். இந்த சிறுநீரக தொல்லை பிரச்னையை தடுக்க அல்லது எதிர்கொள்ள என்னவெல்லாம் செய்யலாம் என்பதனை இந்த பதிவில் நாம் காண உள்ளோம்.
கோடைக்கலாம் ஆரம்பிக்கும் போதே நாம் சிறுநீரக ஆரோக்கியத்தில் அதிக கவனத்துடன் இருத்தல் வேண்டும். குறிப்பாக வயதானவர்கள், சிறிய பிள்ளைகள், இருதய நோய் உள்ளவர்கள், நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்கள் என்று நாட்பட்ட நோய்களை கொண்டவர்களுக்கு இந்த கோடை காலம் சற்று ஆபத்தான காலம் என்று கூறலாம். கோடை வெயிலில் சிறுநீரகப் பிரச்னை எதனால் ஏற்படுகிறது?அதனை எப்படி தடுப்பது என்பதை பார்க்கலாம்.
கோடைக்காலத்தில் எதனால் சிறுநீரகம் பாதிப்படைகிறது:
கோடையில் அதிக வெப்பசூட்டின் காரணமாக பல்வேறு சிறுநீரக தொந்தரவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர் பாதை நோய்த் தொற்றுகள் போன்றவைகள் பலருக்கும் பாதிக்க கூடிய பிரச்சனைகள் ஆகும். அதனை தவிர்த்து நீரேற்றம் இல்லாத பயிற்சி, தசையில் காயம் போன்றவைகளால் இரத்தத்தில் தசை புரதம் கசிவு ஏற்படும். இதன் காரணமாக கடுமையான சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்.
இம்மாதிரியான சிறுநீரக சிக்கல்களை சந்திக்கமால் இருக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
திரவ ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்:
வீட்டில் இருந்தாலும் அல்லது வேலைக்கு செல்பவர்கள் என்றாலும் ஒரு குறிப்பிட்ட இடைவேளையில் போதுமான அளவு தண்ணீர் அல்லது பழச்சாறு எடுத்துக் கொள்ளலாம். போதுமான நீரேற்றம் சிறுநீர் பாதையின் நோய்த்தொற்றை தடுத்து நிறுத்துகிறது.
சிறுநீர்ப்பாதை தொற்றினால் அதிக அசெளகரியத்தை ஏற்படுத்தும். பலருக்கு சிறுநீர் எரிச்சலால் சிறிது சிறிதாக சிறுநீர் கழிப்பார்கள்.
fruits
மேலும் சிலர் ஏசி அறையிலேயே இருப்பதால் சிறுநீர் கழிக்காமல் இருப்பார்கள். குறிப்பிட்ட இடைவேளையில் சிறுநீர் கழிக்காவிட்டால் நோய்த்தொற்று உடலிலே தங்கி நாள்பட்ட சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரக நோய்களாக மாற வாய்ப்பு உள்ளது.
கோடைகாலத்தில் தினமும் 2 முதல் 3 லிட்டர் நீர் ஆகாரங்களை எடுத்துக் கொண்டால் தொற்றுநோயை தடுக்க சிறந்த முறை என்று கூறலாம்.
கோடையில் சிறுநீரகத்தை பாதுகாக்கும் உணவுகள்:
கோடையில் அதிக அளவில் பழங்களையும், காய்கறிகளையும் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது
காய் சிறிது. பலன் பெரிது! இந்த ஒரு காய் போதும் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம்!
பழங்கள்:
பன்னீர் திராட்சை, தர்பூசணி, செர்ரிஸ், முலாம்பழம், ப்ளம்ஸ், ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற நீர்ச்சத்து பழங்கள் என்று உங்கள் டயட்டில் நீங்கள் எடுத்து கொள்ள வேண்டும்.
காய்கறிகள்:
நீர் காய்கறிகளான முட்டை கோஸ்,முள்ளங்கி, பூசணிக்காய், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், சவ் சவ் ,மேலும் கேரட், காலிஃப்ளவர், கேப்ஸிகம் கத்தரிக்காய், பச்சை பட்டாணி, லெட்யூஸ், வெங்காயம், போன்றவைகளை எடுத்துக் கொள்ளலாம். தினமும் 2 விதமான காய்கறிகளும், பழங்களும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பழச்சாறுகள்:
இளநீர், நீர் மோர், கரும்பு ஜூஸ் மற்றும் ஃபிரஷ் ஜூஸ் போன்றவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீரின் நிறம் எப்படி இருந்தால் ஆரோக்கியம்:
சிறுநீரின் நிறமும் நீரேற்றத்தின் அளவை சொல்லும். எலுமிச்சை நிறமாக இருப்பின் போதுமான நீரேற்ற அளவை குறித்துக் கொள்ளலாம். ஆரஞ்சு அல்லது ஏதேனும் அடர் நிறத்தை கொண்டிருந்தால் அது நீரிழப்பை சுட்டிக் காட்டும் .
இம்மாதிராயண சூழ்நிலைகளில் பணியிடங்களில் இருப்பவராயின் நீரேற்றத்தை பராமரிக்க போதுமான இடைவேளையில் அதாவது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 1/4 லிட்டர் அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுதல் நல்லது.
சிறுநீரக கோளாறின் எச்சரிக்கை அறிகுறிகள்:
அதீத உடல் சோர்வு
சிறுநீரின் கழிப்பது குறைதல்
அடர் மஞ்சள் நிற சிறுநீர்
சிறுநீர் செல்லும் போது எரிச்சல்
வறண்ட வாய் மற்றும் தொண்டை
நுரை போன்று வரும் சிறுநீர்
முதுகுவலி
அடி வயிற்று வலி
தசைப்பிடிப்பு
தலைச்சுற்றல்
பசியற்ற நிலை
உயர் இரத்த அழுத்தம்
இம்மாதிரியான அறிகுறிகள் இருப்பின் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
கோடையில் தவிர்க்கப்பட வேண்டியவை:
அசைவ உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உண்வுகள்
எண்ணெய் உணவுகள்
மது அருந்துதல்
தேநீர் மற்றும் காபி
இவைகளை முறையாக பின்பற்றினாலே சிறுநீரக பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்