கண் நோய் மற்றும் சர்க்கரை நோய்:
25 கிராம் கடுக்காய்ப் பொடியில், ஒரு க்ளாஸ் தண்ணீர் ஊற்றி 50 மில்லி அளவாக குறையும் வரை கொதிக்க செய்து பருகினால் சர்க்கரை நோய் போன்றவை கட்டுப்படும். மேலும் இதனை சில துளிகள் கண்ணில் விட்டால் கண்நோய் உடனே குணமாகும்.
உயிரணு குறைபாட்டிற்கு:
கடுக்காய் பொடியினை தினமும் எடுத்து வந்தால், உடல் பலவீனத்தைப் போக்கி வலிமை பெறுவதோடு, ஆண்களின் உயிரணு பிரச்னைகளை சரி செய்யும் தன்மை கொண்டது.
வயிறு பிரச்சனைகளுக்கு :
வயிற்றுப் பகுதியான இரைப்பை மற்றும் குடலில் இருக்கும் ரணங்களை ஆற்றிடும் தன்மை கொண்டது. மேலும் கடுக்காய் பொடியினை தினமும் தண்ணீரில் கலந்து பருகுவதால் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி அதிகரிக்கும், தோலில் வெண் புள்ளிகள் இருப்பின் மறையும் .பித்தம், கபம் போன்றவற்றால் வரும் பல்வேறு வியாதிகள் குணமாகும் .அதோடு மட்டுமல்லாமல் இருமல், கை கால் நமச்சல், மார்பு இறுக்கம், வயிற்றுப் பொருமல் ஆகியவைகளையும் விரைவில் சரி செய்யும்.
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த கடுக்காய் பொடியினை நீங்களும் எடுத்துக் கொண்டு நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாகவும், இளமையாகவும், வாழுங்கள்.