கணவரை ஈஸியா ஏமாத்தி கள்ள உறவு கொள்ளும் பெண்கள்.. கையும் களவுமா மாட்டிக்கிட்டா இதை சொல்லி தப்பிச்சுடுறாங்க..!

First Published | Mar 9, 2023, 1:52 PM IST

உறவில் பெண்கள் எப்போது ஆண்களை ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? அறிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படியுங்கள். 

ஆண்களை விடவும் பெண்கள் தான் உறவில் அதிகம் ஏமாற்றுகிறார்கள் என ஒரு சாரார் வாதாடி வருகின்றனர். தங்கள் துணையோடு மகிழ்ச்சியாக இல்லாதவர்கள், பாலுறவில் திருப்தி இல்லாதவர்கள், தங்களுடைய தேவையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய ஏமாற்றுகிறார்கள். இதில் ஆண் பெண் வித்தியாசம் இல்லை என்றாலும், இந்த பதிவில் பெண்கள் ஏமாற்றுவதற்கான காரணங்கள் குறித்து காணலாம்.

பெண்கள் தங்கள் கணவரை விட ஆரோக்கியமான, நல்ல ஆண்களை காணும்போது மனம் தடுமாறுகிறார்கள். தங்கள் திருமண உறவில் இருக்கும் அழுத்தத்திலிருந்து விலகி இருக்க சில வாய்ப்புகளைத் தேடுகிறார்கள். சில ஆண்கள் இந்த வாய்ப்புகளை பரந்த அளவில் பார்க்க முனைகின்றனர். இப்படி தங்கள் இல்வாழ்வில் திருப்தியில்லாத பெண்கள் கவர்ச்சிகரமான சில வார்த்தைகளால் கூட ஈர்க்கப்பட்டு தங்கள் துணையை ஏமாற்றிவிடுகிறார்கள். 'உன் கண்ணுல வாழனும் டி..நெஞ்சுல சாகனும்..' இந்த வார்த்தைகளில் கூட சில பெண்கள் விழுந்துவிடுகிறார்களாம். 

Tap to resize

சில பெண்களுக்கு வீட்டில் மரியாதை கிடைப்பதில்லை. தங்கள் உறவுக்கு வெளியே இதனை பெற விரும்புகிறார்கள். சில பெண்கள் தங்கள் திருமண உறவில் வெறுப்பு அல்லது கோபம், உறவில் அதிருப்தி அடையும் போது ஏமாற்றுகிறார்கள். 

அது மட்டுமில்லாமல்... தணிக்க முடியாத தனிமை, உணர்ச்சிரீதியான கைவிடுதல் போன்றவையும் பெண்கள் ஏமாற்றுவதற்கான மற்ற சில காரணங்களாகும். அருகே அமர்ந்து பேச வேண்டும் என எதிர்பார்க்கும் சமயங்களில் கூட தனிமை கொடியது. அப்போது இன்னொருவரை தேடி செல்கிறார்கள். ஒருவேளை அவர்களிடம் இந்த திருமணத்தை மீறிய கள்ளத்தனமான உறவு குறித்து கேட்டால்... வீட்டில் நிறைவாக இருந்தால் ஏன் வெளியே தேட போகிறேன் என ஒரே போடாக போட்டுவிடுகிறார்களாம். 

பெண்கள் எப்படி ஏமாற்ற வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். தங்கள் கணவரின் நடத்தை பற்றி ஆழமான புரிதலைக் கொண்டுள்ளனர். இதனால் அவர்களின் துரோகத்தை மறைப்பதை எளிதாக கையாண்டு விடுகிறார்கள். தங்கள் வசதிக்கேற்ப, தங்கள் கணவரின் மனநிலையை கூட மாற்றி ஆட்டி வைக்கிறார்கள். இதனால் வேறொரு உறவில் இருப்பது கூட எளிதாகிவிடுகிறது. 

இதையும் படிங்க: ஆணுறுப்பு இந்த சைஸ்-ல இருந்தால்.. தாம்பத்தியத்தில் ஒரு பிரச்சனையும் வராது.. இந்த டெக்னிக் தெரிஞ்சுக்கோங்க..!

தம்பதிகளுக்குள் பொய், துரோகம் எல்லாம் வர முக்கிய காரணங்களில் ஒன்று பாலியல் விரக்தி. செக்ஸ் உறவு முழுமையாக இல்லாமல் இருப்பது உறவில் துரோகம் செய்ய ஒரு காரணம். பெரும்பாலான பெண்கள், அவர்களின் பாலியல் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றால் ஏமாற்றுவார்கள். ஏமாற்றுவதிலும் பெண்கள் தங்கள் ரசனைக்கு மிகவும் ஏற்ற சிறந்த நபரையே தேடுகிறார்கள்.

ஆண்களே.. ஒருவேளை நீங்கள் இப்படி கேவலமாக நடந்து கொண்ட பின்னரும், உங்கள் மனைவி உங்களுக்கு நேர்மையாக இருந்தால் நீங்கள் பாக்கியவான். மனைவியை கொண்டாடுங்கள். இனியாவது அவரது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். 

பெண்கள் மட்டுமல்ல... ஆண்களும் இதே காரணங்களுக்காக துரோகம் செய்யக் கூடியவர்கள் தான். உறவில் அன்பு, அக்கறை, காமம்.. சரியான அளவில் இல்லாவிட்டால் அந்த உறவில் மூன்றாம் நபர் எளிதில் நுழைந்துவிடுகிறார். கவனம்...நலம் வாழுங்கள். 

இதையும் படிங்க: கணவரிடம் திருப்தியில்லை.. இப்போ முன்னாள் காதலனுடன் பேசுவது தவறா? வாசகிக்கு நிபுணர் அட்வைஸ்

Latest Videos

click me!