சூரிய ஒளியால் வைட்டமின் டி முழுமையா கிடைக்கும்.. அதை பெற சரியான நேரம் எது தெரியுமா?

First Published | Mar 9, 2023, 11:25 AM IST

Vitamin D: நம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான வைட்டமின் டி- எனும் சத்தை சூரிய ஒளி மூலம் பெற்று கொள்ளலாம். 

எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க வைட்டமின் டி முக்கியமானது. இது நம் உடலின் கால்சியம், பாஸ்பேட் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த இரண்டு தாதுக்களும் ஆரோக்கியமான எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளை பராமரிக்க உதவுகின்றன. நமக்குத் தேவைப்படும் வைட்டமின் டி- சத்தின் பெரும்பகுதி சூரிய ஒளியில் இருந்து வருகிறது. 

எப்போது சூரிய ஒளியில் வெளியே செல்ல வேண்டும்? 

வைட்டமின் டி-யைப் பெற சூரிய ஒளியில் எவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டும் என்பதை குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள். உங்களுடைய முகம், கைகள், கால்கள் சூரிய ஒளியில் படும்போது தான் வைட்டமின் டி கிடைக்கிறது. தினமும் சூரிய ஒளியில் நீங்கள் நனையாவிட்டாலும், ஒவ்வொரு இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை வெயில்படும்படி நடமாடுங்கள்.

Tap to resize

எத்தனை நிமிடங்கள் சூரிய ஒளியில் நடமாட வேண்டும்? 

வாரத்தில் 2 அல்லது 3 நாள்களில் சுமார் 5 முதல் முப்பது நிமிடங்கள் வரை சூரிய ஒளியை அனுபவிக்கலாம். சூரியனின் புற ஊதா கதிர்வீச்சின் தீவிரத்தைப் பொறுத்து இந்த நேரம் மாறுபடலாம்.  

வைட்டமின் டி- பெற சரியான நேரம் எது தெரியுமா? 

காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையிலான நேரத்தில் தான் சூரிய ஒளியில் இருந்து அதிக வைட்டமின் டி வெளிப்படுகிறது. UVB கதிர்கள் அப்போது வலுவாக உள்ளன. அந்த நேரத்தில் உடல் வைட்டமின் டி-ஐ விரைவாக உற்பத்தி செய்வதாக நம்பப்படுகிறது. கருமையான சருமம் கொண்டவர்களுக்கு மற்ற சருமத்தினரை விட வைட்டமின் டி- உறிஞ்சி கொள்ள கூடுதல் நேரமாகலாம். 

மேகமூட்டமான நாளில் வைட்டமின் டி பெற முடியுமா? 

ரொம்ப வெயில் குறைவான நாட்களில் கூட, சூரியனிடமிருந்து வைட்டமின் டி-ஐ பெற முடியும். ஆனாலும் பிரகாசமான நாட்களை விட குறைவாகவே வைட்டமின் டி கிடைக்கும். புற ஊதா கதிர்வீச்சுக்கு எதிரான பாதுகாப்பு நெறிமுறையாக சூரிய ஒளியில் வெளிப்படும் போது உங்கள் தோல் வைட்டமின் டி-ஐ உற்பத்தி செய்கிறது. இந்த UVB கதிர்கள் சில நேரம் மேகங்களால் தடுக்கப்படலாம். இது உங்கள் தோல் உற்பத்தி செய்யும் வைட்டமின் டி அளவைக் குறைக்கிறது. சூரிய ஒளியை மட்டும் நம்பி கொண்டிருக்காமல், சத்தான உணவு உணவு மற்ற ஆதாரங்களில் இருந்து வைட்டமின் டி பெற அறிவுறுத்தப்படுகிறது. 

Latest Videos

click me!