Daytime Sleep : எப்போதும் பகலில் தூக்கம் வருதா? இந்த '5' உணவுகள் சாப்பிட்டால் அப்படிதான்!! சோர்வா இருக்கும்

Published : Aug 23, 2025, 09:09 AM IST

பகலில் சுறுசுறுப்பே இல்லாமல் சோர்வாக தூங்கி வழியுறீங்களா? அதற்கு காரணமான உணவுகளை இங்கு காணலாம்.

PREV
16

காலை எழுந்ததும் பலர் காபி அல்லது டீ குடிப்பதே அந்த நாள் முழுக்க உற்சாகமாக இருக்கத்தான். ஆனால் சிலருக்கு எத்தனை டீ குடித்தாலும் சோர்வாகவே இருக்கும். தூங்கி வழிவார்கள். ஏன் அவர்களுக்கு தூக்கம் வருகிறது என்றே தெரியாது. உண்மையில் பகலில் தூக்கம் வர உணவுகள் தான் காரணம். நீங்கள் பின்வரும் சில உணவுகளை சாப்பிட்டால் கண்டிப்பாக தூக்கம் தான் வரும்.

26

எளிய உணவு பழக்கங்கள் சோர்வை நீக்கி தூக்கத்தைத் தரும். சில உணவுகள் தூக்கத்தை வரவழைக்கும். ஊறுகாய், கருவாடு போன்ற அதிகம் உப்பு கலந்த உணவுகள் பகலில் தூக்கம் வரவழைக்கும். அதிகம் பழுத்த பழங்களான வாழைப்பழம், வெண்ணெய் பழங்கள் போன்றவை தூக்கத்தை வரவழைக்கும்.

36

நன்கு பழுத்த பழங்களைப் போலவே நாளான பாலாடைக்கட்டிகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ஈஸ்ட் உணவுகள் போன்றவற்றில் டைரமைன் அதிகம் இருக்கிறது. அவையும் பகலில் தூக்கம் வரவழைக்கும்.

46

ஓட்ஸ் உணவுகள், பாதாம், பருப்பு வகைகள், அக்ரூட் பருப்புகள், டோஃபு, வான்கோழி இறைச்சி, பூசணி விதைகள், சியா விதைகள், தர்பூசணி ஆகியவை பகலில் தூக்கம் வரவழைக்கும் உணவுகளாகும். இந்த உணவுகளில் உள்ள டிரிப்டோபான் தூக்கத்தை வர வைக்கும் அமினோ அமிலமாகும். இதுவே மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனை உற்பத்தியாக ஆதரவளிக்கிறது.

56

பகல்நேர சோர்வு ஆபத்து

பகலில் சோர்வாக இருப்பது நல்லதல்ல. இது ஆரம்பகால மரணத்துடன் தொடர்புடையது என ஆய்வுகள் கூறுகின்றன. 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடுத்தர வயது பெரியவர்களை வைத்து செய்ய ஆய்வில், பிற்பகலில் தொடர்ந்து தூங்கும் நபர்கள் அப்படி தூங்காதவர்களை விடவும் முன்கூட்டி இறக்கும் வாய்ப்பு இருந்ததை கண்டறிந்தனர்.

66

பகலில் தூங்குவது இரவில் ஓய்வு போதுமானதாக இல்லை என்ற எச்சரிக்கையாக இருக்காலாம். தூக்கப் பிரச்சனைகள், டிமென்ஷியா, மாரடைப்பு ஆகியவற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே தொடர்ந்து பகலில் சோர்வாக காணப்பட்டால் மருத்துவரை அணுகுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories