Brain Health : புதிய மூளை செல்கள் உருவாக வாய்ப்பு இருக்கா? வாக்கிங் கூட இந்த பயிற்சிகள்.. ஆய்வில் நிரூபணம்

Published : Oct 14, 2025, 09:45 AM IST

மூன்று பயிற்சிகளை செய்யும்போது புதிய மூளை செல்கள் உருவாவதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

PREV
15

மனிதனுடைய பரிணாம வளர்ச்சி குறித்து பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக செய்து வரும் ஆய்வுகளின் முடிவில் வயது வந்த மனிதர்களுடைய மூளையில் உள்ள ஹிப்போகாம்பல் நியூரோஜெனீசிஸ் எனப்படுகிற ஒரு செயல்பாட்டில் புதிய மூளை செல்களை உருவாக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சில தூண்டுதல்கள் ஏற்படும்போது ஹிப்போகாம்பஸ் பகுதிகளில் புதிய நியூரான்கள் வளரலாம் என சொல்லப்படுகிறது. இதற்கு 3 விதமான பயிற்சிகளை செய்யலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

25

2020 ஆம் ஆண்டில் செய்த ஓர் ஆய்வில், ஒரு குழுவில் வயதானவர்கள் ஒரே நேரத்தில் ஏரோபிக் பயிற்சிகள், அறிவாற்றல் பயிற்சி ஆகியவை செய்தனர். மற்றொரு குழு ஏரோபிக் மட்டும், அறிவாற்றல் மட்டும் தனித்தனியாக செய்தனர். இந்தக் குழுக்களை ஒப்பிட்டபோது இரண்டு பயிற்சிகளையும் செய்த குழுவின் அறிவாற்றல் செயல்திறனில் இரு மடங்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

35

மூன்று பயிற்சிகள்

கால் தசைகள்தான் உடலில் மிகப்பெரியதாக உள்ளன. இதனை செயல்படுத்துவதால் மூளையின் ஆரோக்கியம் நேரடியாக ஆதரிக்கப்படுகிறது. இதனால் மாற்றங்கள் ஏற்படுகின்றன. நடைபயிற்சி, படி, மலை அல்லது உயரமான இடங்களில் ஏறுதல், சைக்கிள் ஓட்டுதல், ஸ்குவாட்ஸ் என்ற குந்துகைகள் ஆகியவை கால்களுக்கு ஏற்ற பயிற்சிகளாக இருக்கும். சில ஆய்வுகள் இந்த பயிற்சிகள் வயதானவர்களுக்கு மூளை ஆரோக்கிய நன்மைகளைத் தொடர்ந்து அளிக்கின்றன. கால்களை அதிகம் பயன்படுத்தும்போது அதன் வேகம் இதயத்திற்கு நல்ல பயிற்சியாக இருக்கும்.

45

உடற்பயிற்சி செய்வதால் உடலில் அனைத்து இடங்களுக்கும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆற்றலுக்கு தேவையான குளுக்கோஸ் மற்றும் ஊட்டச்சத்து விநியோகம் மேம்படுகிறது. இது செல்களின் வளர்சிதை மாற்றம், உயிர்வாழ்வை மேம்பாடு அடைய செய்கிறது. தினமும் உடற்பயிற்சி செய்வது புதிய இரத்த நாளங்கள் உருவாவதைத் தூண்டும் என சொல்லப்படுகிறது.

55

மேலே சொன்ன பயிற்சிகளை அடிக்கடி செய்வது நாள்பட்ட வீக்கம், ஆக்ஸிஜனேற்ற சேதம், நியூரோஜெனிசிஸைத் தடுக்கும். வலுவான கால்கள், எதிர்ப்பு பயிற்சி, நடைபயிற்சி ஆகியவை புதிய நியூரான்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதுவே நினைவாற்றலை மேம்படுத்துகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories