"மைண்ட்ஃபுல்னஸ்" சிகிச்சை மிகவும் பிரபலமானது. இது நம்மை மகிழ்ச்சியாக இருக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், நம்முடைய மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. ஆனால் இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அவற்றிற்கான பதில் இங்கே..
நினைவாற்றல் என்பது மன அழுத்ததிற்கான காரணத்தை கண்டறிய பெரிதும் உதவுகிறது. இவற்றின் மூலம் உங்களை மன அழுத்தத்திற்கு தூண்டும் விஷயங்கள் என்ன என்பதை சுலபமாக அறியலாம்.
நினைவாற்றல், நம்முடைய மனதுக்கும் உடலுக்கும் இடையே சிறந்த தொடர்பை உருவாக்குகிறது. இதனால், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், தன்னுடைய உடல் எந்தளவு பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து, அவற்றிலிருந்து விலகுவதற்கான வழியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
இதையும் படிங்க: கார்ப்பரேட் வாழ்க்கை: மோசமான மனநலப் பிரச்சினை அதிகரிக்கும் அபாயம்..!!
இது மட்டுமல்லாமல் நினைவாற்றல் நமக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. மேலும் இவை உடலில் இருக்கும் மன அழுத்த ஹார்மோன்களின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதனால் மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
அதுபோல் நினைவாற்றலானது, நம்முடைய உணர்ச்சிகள் மற்றும் திறன்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயங்களில் கவனம் குறையும். எனவே நீங்கள் மன அளித்ததால் பாதிக்கப்பட்டிருந்தால் இன்றிலிருந்து இந்த சிகிச்சையை ட்ரை பண்ணுங்க..முடிவில் நல்ல பலனை பெறுவீர்கள்.