இதனை ஒப்புக்கொண்ட உணவியல் நிபுணர் கரிமா கோயல், பூண்டில் அல்லிசின் என்ற ஒருவித கலவை உள்ளது. உண்மையில், இது ஒரு அருமருந்து என பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இது புற்றுநோய், இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு எதிராக போராடும் சிறந்த நோய்த் தடுப்பு விளைவுகளை கொண்டுள்ளது. மேலும், இதன் ஆக்ஸிஜனேற்ற நடவடிக்கைகள் மூலமாக உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
ஊட்டச்சத்து நிபுணரான லோவ்னீத் பாத்ராவும், பூண்டு ஒரு “அதிசயம் நிறைந்த உணவு” என அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார்.