Grey Beard: 30 வயதிலேயே தாடி நரைக்கிறதா? உண்மையான காரணம் இதுதான்.! சரி செய்யும் எளிய வழிகள்.!

Published : May 29, 2026, 01:54 PM IST

Thadi Narai Mudi Poga Tips in Tamil: இப்போதெல்லாம் தாடி நரைக்கிறதுக்கு வயசு ஒரு தடையில்லை. 25-30 வயசுலேயே பலருக்கும் தாடியில் வெள்ளை முடி வர ஆரம்பிச்சிடுது. இதுக்கு என்ன காரணம்னு ஆரம்பத்திலேயே தெரிஞ்சுகிட்டா, சரி பண்றது ரொம்ப சுலபம். 

PREV
16
Thadi Narai Mudi Poga Tips in Tamil

முக அழகு ஒருத்தரோட தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இப்போல்லாம் ஆண்களும் முக அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க. இளம் வயசுலேயே தாடியில வெள்ளை முடி வந்தா, அது அவங்களுக்கு ஒருவித தர்மசங்கடத்தை உண்டாக்கும். இதனால அவங்க தன்னம்பிக்கையும் குறையும். இப்படி சின்ன வயசுலேயே தாடி நரைக்க பல காரணங்கள் இருக்கு.

இதையும் படியுங்கள்: Lifestyle: உள்ளாடை முதல் பெட்ஷீட் வரை.! எத்தனை நாளைக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்? மருத்துவர் கூறும் அறிவுரை.!

26
தாடி நரைக்க காரணம்

நம்ம சருமத்துக்கும் முடிக்கும் இயற்கையான நிறத்தைக் கொடுக்குறது மெலனின் என்ற நிறமிதான். உடம்புல மெலனின் உற்பத்தி குறையும்போது, முடி தன்னோட இயற்கையான நிறத்தை இழந்து, நரைக்க ஆரம்பிக்குது. மெலனின் குறைபாடு ஏற்படும் பொழுது தலை முடி, தாடி என அனைத்திலும் நரை ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள்: Sunflower Oil: சன்ஃபிளவர் எண்ணெய் உண்மையிலேயே ஆரோக்கியமானதா? நிபுணர்கள் கூறும் ஷாக்கிங் உண்மை.!

36
மரபணு முக்கிய காரணம்

தாடியில சீக்கிரமா வெள்ளை முடி வர்றதுக்கு மரபணுவும் ஒரு முக்கிய காரணம். உங்க அப்பாவுக்கோ அல்லது தாத்தாவுக்கோ சின்ன வயசுலேயே நரைமுடி வந்திருந்தா, உங்களுக்கும் அந்தப் பிரச்னை வர வாய்ப்பு அதிகம். மரபணு காரணங்களை முழுசா தடுக்க முடியாது. ஆனா, சரியான பராமரிப்பு மூலமா இந்தப் பிரச்னையை தள்ளிப்போடலாம்.

இதையும் படியுங்கள்: Bay Leaf Benefits: சாதம் வடிக்கும்போது ஒரு பிரியாணி இலை.! இவ்வளவு மருத்துவ நன்மைகள் கிடைக்குமா?

46
'நோர்எபினெஃப்ரின்' ரசாயனம்

இன்றைய வேகமான வாழ்க்கையில, வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைல ஏற்படுற மன அழுத்தம் நம்ம உடம்பை நேரடியா பாதிக்குது. ஒருத்தர் தொடர்ந்து மன அழுத்தத்துல இருந்தா, உடம்புல 'நோர்எபினெஃப்ரின்' (Norepinephrine) என்ற ரசாயனம் சுரக்கும். இந்த ரசாயனம், முடியின் நிறத்தைப் பாதுகாக்கிற ஸ்டெம் செல்களை சேதப்படுத்தும். இதனால, தாடி சீக்கிரமா நரைக்க ஆரம்பிக்கும். சரியான தூக்கம் இல்லாதது, பதட்டம், உடற்பயிற்சி செய்யாதது போன்றவையும் இந்தப் பிரச்னையை அதிகமாக்கும்.

இதையும் படியுங்கள்: Diabetes: இந்த சீக்ரெட் பொடியை மோரில் சேர்த்துக் குடித்தால் சர்க்கரை நோய் காணாமல் போகும்.!

56
வைட்டமின் குறைபாடுகள்

உடம்புக்குத் தேவையான சத்துக்கள் குறைவா இருந்தாலும் தாடி சீக்கிரமா நரைக்கும். வைட்டமின் B12, வைட்டமின் D3, இரும்புச்சத்து, காப்பர் போன்ற சத்துக்கள் குறைபாடு, முடியோட வேர்க்கால்களை பலவீனமாக்கி, மெலனின் உற்பத்தியைக் குறைச்சிடும். அசைவ உணவு சாப்பிடாதவங்களுக்கு வைட்டமின் B12 குறைபாடு அதிகமா காணப்படும். புகைப்பிடிக்கிற பழக்கமும் தாடி நரைக்கிறதுக்கு ஒரு முக்கிய காரணம்.

இதையும் படியுங்கள்: Food : மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத 10 உணவுகள்.! இதெல்லாம் விஷமாக மாறுமாம்.! புற்றுநோய் ஆபத்து வரும்.! எச்சரிக்கை.!

66
தாடி நரை கருப்பாக

30 வயசுலேயே தாடி நரைக்குதுன்னா, உங்க லைஃப்ஸ்டைலை மாத்திக்கோங்க. வைட்டமின் குறைபாட்டை சரிசெய்ய, உங்க உணவுல கீரைகள், டிரை ஃப்ரூட்ஸ், முட்டை, பால் பொருட்களை சேர்த்துக்கோங்க. மன அழுத்தத்தைக் குறைக்க தினமும் யோகா அல்லது தியானம் பண்ணுங்க. குறைஞ்சது 7-8 மணி நேரம் நல்லா தூங்குங்க. புகைப்பிடிக்கிறது, புகையிலை பயன்படுத்துறதை நிறுத்துங்க. தாடிக்கு ரசாயனம் கலந்த பொருட்களை அதிகமா பயன்படுத்தாதீங்க.

Read more Photos on
click me!

Recommended Stories