Tamil health tips to Stay Healthy in Summer: கோடை காலம் தொடங்கிய பின் மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை சரும நோய்கள், நீர்க்கடுப்பு, சோர்வு. அதிகமான வியர்வை வெளியேறுவதால் சிலருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். உடலை நீரேற்றமாக வைத்திருக்காவிட்டால் அதனாலும் பாதிப்புகள் ஏற்படலாம். இந்த பதிவில் கடும் வெப்பம் உண்டாக்கும் நோய்களைத் தவிர்க்க சில வீட்டு வைத்தியங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தினமும் காலை 5 சின்ன வெங்காயம் சாப்பிடுங்கள். இது வெயில்கால நோய்க்கு நல்ல மருந்து. மதிய உணவுடன் (எந்த உணவாக இருந்தாலும்) 2 சின்ன வெங்காயம் சேர்த்து உண்ணலாம். கோடைகாலங்களில் பழையசோற்று நீச்ச தண்ணீரும் சின்ன வெங்காயமும் உடலுக்கு அவ்வளவு நல்லது.
lemon
நீங்கள் வெயிலில் வெளியே செல்கிறீர்கள் என்றால், உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு நீரிழப்புக்கு காரணமாகிவிடும். அதனால் வெளியே செல்லும்போது தண்ணீர் கொண்டு போக மறக்கவேண்டாம். எப்போதும் கையில் எலுமிச்சைப் பழத்தை வைத்து கொள்ளுங்கள். இதனை பிழிந்து நீருடன் அருந்துவதால் நீரிழப்பு சரியாகும். வாழைப்பழம், கரும்புச்சாறு, நுங்கு, இளநீர்,வெள்ளரிக்காய், ஆகியவை வெயிலுக்கு நல்லது. இதனால் தலைசுற்றல் போன்ற நோய்களைத் தவிர்க்கலாம். அடிக்கடி எடுத்து கொள்ளுங்கள்.