செக்ஸ் தவிர்த்து இப்படியெல்லாம் கூட பாலியல் நோய்கள் பரவுமா? அட இந்த விஷயங்களில் எப்போதும் உஷாரா இருங்க..!

First Published Mar 17, 2023, 1:32 PM IST

பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் நாம் நினைத்து கூட பார்க்காத பல வழிகளில் அசாதாரணமாக பரவுகிறது. அதை எப்படி அறிந்து கொண்டு தவிர்ப்பது என்பதை இங்கு காணலாம். 

உடலுறவும் அது சார்ந்த காமமும் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. ஆனால் அதில் மோசமான விஷயம் என்னவென்றால், பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் (STIs) வருவதைத் தடுக்க நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்த நோய்கள் சில பொருள்களால் கூட நமக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த வகையான பொருள்களை தவிர்ப்பதன் மூலம் நோய் வராமல் தப்பலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். 

பாலியல் நோய் கொண்ட நபருடன் தோலை வெட்டக்கூடிய சாதனங்களைப் பகிரவே கூடாது. இது இரத்தத்தில் பரவும் நோய்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பரவுவதற்கு வழிவகுக்கும். ஹெபடைடிஸ் பி, சி, எச்ஐவி ஆகிய நோய்கள் அடங்கும். நீங்கள் பயன்படுத்தும் ஊசிகளை ஒருபோதும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. உங்களுடைய ரேஸர் அல்லது பல் துலக்கும் பிரஷ் ஆகியவை எப்போது மற்றவர்களுடன் பகிரக்கூடாது. 

Image: Getty Images

உணவு அல்லது பானங்கள் மூலமும் ஹெபடைடிஸ் ஏ பரவலாம். இது குத உடலுறவின் மூலம் (மலத்தின் மூலம்) மற்றவர்களுக்கு பரவுகிறது. வளர்ச்சியடையாத நாடுகளில் இது மிகவும் பொதுவானது. பாலியல் நோய் கொண்ட நபரின் உணவையும் மற்ற பொருள்களையும் பகிர்ந்து கொள்ளவேண்டாம். 

மனித பாப்பிலோமா வைரஸ் சருமம் மூலம் நோயை பரப்பும். நீங்கள் குத, யோனி, வாய்வழி உடலுறவு வைக்கும்போது இந்த நோய் பரவுகிறது. இதனால் தொண்டை, நாக்கு, கால் ஆகிய பகுதியில் பாதிப்பு வரும். பிறப்புறுப்பு மருக்கள் ஏற்படலாம். சிபிலிஸ் நோய்த்தொற்றின் ஆரம்ப நிலையில் புண்ணுடன் நேரடி தொடர்பு கொண்டால் நோய் பரவும். ஆகவே புண் இருக்கும் நபரை தொடுவதையோ, உரசுவதையோ தவிர்க்க வேண்டும்.

எப்போதும் பாலியல் நோய் பரவாமல் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். அதற்கு மற்றவர்களின் துணிகள், ரேஸர்கள், உள்ளாடைகள் அல்லது நீச்சலுடைகளை கடன் வாங்காமல் அல்லது பரிமாறிக்கொள்ளாமல் உங்கள் சொந்த ஆடைகளை பயன்படுத்துங்கள். இவை பிறப்புறுப்பு பாலியல் நோய்கள் பரவுவதில் ஒரு காரணியாக இருக்கலாம். 

இதையும் படிங்க: சொந்த தங்கையை மணமுடித்த இளைஞர்.. ரெண்டு குழந்தைகள் பெற்ற பிறகு தெரிந்த உண்மை.. குடும்பத்துக்கே ஷாக்!!

உங்களுடைய வாயைச் சுற்றி புண்கள் இருந்தால், நீங்கள் விட்டு தொலைக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. பொதுவாக ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் (Herpes simplex-1) வைரஸ் தாக்கினால் தான் இந்த பாலியல் நோய் வரும். இந்த நோய் தாக்கிய ஒருவருடன் தொடர்பு கொண்டால் உங்களுக்கும் வாயில் புண்கள் அல்லது பிறப்புறுப்பில் புண்கள் ஏற்படலாம். இந்த மாதிரி புண் இருக்கும்போது வாய்வழி உறவை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் பெண்களின் யோனி பகுதியில் இந்த நோய் தாக்கலாம். அதுமட்டுமில்லை தொடை, கண், உதடு, தொண்டையிலும் இந்த வைரஸ் பாதிப்பு வரலாம். அலட்ர்ட் பெண்களே..

இதையும் படிங்க: உங்க தாம்பத்திய வாழ்க்கையில் இந்த 1 விஷயம் செய்யுங்க.. உங்க துணை காந்தம் மாதிரி உங்க கிட்ட ஒட்டிப்பாங்க!

click me!