Thyroid Cancer: சாதாரண தொண்டை வலிதானே என்று விடாதீர்கள்.. தைராய்டு புற்றுநோயின் 'சைலண்ட்' அறிகுறிகள்!

Published : May 08, 2026, 09:30 PM IST

தைராய்டு புற்றுநோய் என்பது தைராய்டு சுரப்பியில் ஏற்படும் ஒரு பாதிப்பாகும். தைராய்டு கேன்சரின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
16
கழுத்தில் சின்ன கட்டி அல்லது வீக்கம்

தைராய்டு புற்றுநோய் (Thyroid Cancer) என்பது கழுத்தின் அடிப்பகுதியில் பட்டாம்பூச்சி வடிவில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பியில் ஏற்படும் ஒரு பாதிப்பாகும். பொதுவாக, ஆரம்ப நிலையில் இது பெரிய அளவிலான வலியைத் தராததால், பலரும் இதை கவனிக்காமல் விட்டுவிடுவதுண்டு.

தைராய்டு கேன்சரோட முதல் அறிகுறியே கழுத்தோட முன்பக்கத்துல, கீழ் பகுதியில வர்ற கட்டி அல்லது வீக்கம்தான். இந்தக் கட்டி பெரும்பாலும் வலிக்காது, மெதுவா வளரும். சில சமயம் இது சாதாரண நீர்க்கட்டி (cysts) அல்லது கழலைக்கட்டியா (goiters) கூட இருக்கலாம். ஆனா, கழுத்துல புதுசா கட்டி வந்தாலோ அல்லது இருக்கிற கட்டி வளர்ந்தாலோ, உடனே டாக்டரைப் பார்க்குறது ரொம்ப முக்கியம்.

26
குரலில் கரகரப்பு
தைராய்டு கேன்சர், குரல்வளையை (vocal cords) கட்டுப்படுத்துற நரம்புகளைப் பாதிக்க வாய்ப்பிருக்கு. இதனால, குரல்ல மாற்றம் ஏற்படலாம் அல்லது குரல் கரகரப்பாக மாறலாம். உங்க குரல் கரகரப்பாகி, சில வாரங்கள் ஆகியும் சரியாகலைனா, அதைச் சாதாரணமாக எடுத்துக்காதீங்க.
36
விழுங்குவதற்கோ, சுவாசிப்பதற்கோ சிரமம்
கட்டி வளர வளர, அது உணவுக்குழாய் (esophagus) அல்லது மூச்சுக்குழாயை (trachea) அழுத்த ஆரம்பிக்கும். இந்த அழுத்தம் காரணமா, சாப்பிடும்போது விழுங்குறதுக்கு கஷ்டமா இருக்கலாம். தொண்டையில ஏதோ அடைச்ச மாதிரி ஒரு உணர்வு இருக்கும். சில சமயம், மூச்சு விடுறதுல கூட சிரமம் ஏற்படலாம்.
46
கழுத்து அல்லது தொண்டையில் தொடர் வலி
கழுத்தோட முன்பக்கத்திலயோ அல்லது தொண்டையிலயோ தொடர்ந்து வலி இருந்தா, அதுவும் தைராய்டு கேன்சரோட ஒரு அறிகுறியா இருக்கலாம். இந்த வலியை அலட்சியப்படுத்த வேண்டாம்.
56
காது வலி
கழுத்துல ஏற்படுற இந்த வலி, சில நேரங்கள்ல காதுகள் வரைக்கும் பரவலாம். கழுத்து, தொண்டை, காது வலிலாம் சாதாரணமா வர்றதுதான்னு நெனச்சு, பலரும் இந்த அறிகுறியை கண்டுக்காம விட்டுடுவாங்க.
66
காரணமில்லாத எடை இழப்பும் சோர்வும்

எந்தக் காரணமும் இல்லாம திடீர்னு உடல் எடை குறையுறது, எப்பவும் சோர்வா உணர்றது போன்றவையும் மத்த அறிகுறிகளோட சேர்ந்து தென்படலாம். மேல சொன்ன அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா, நீங்களா ஒரு முடிவுக்கு வராம, உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். பரிசோதனைகளுக்குப் பிறகுதான் நோயை உறுதி செய்ய முடியும்.

Read more Photos on
click me!

Recommended Stories