ஆண் பிள்ளைகள் எப்போ வயசுக்கு வருவாங்க?பெற்றோர் கண்டிப்பா அறிய வேண்டிய விஷயங்கள்!!

First Published | Jun 28, 2023, 10:00 AM IST

இந்தியாவில் பெண் குழந்தைகள் வயதுக்கு வருவது கொண்டாடப்படுகிறது. ஆனால் ஆண் பிள்ளைகளின் பருவ மாற்றங்கள் கண்டு கொள்ளப்படுவதில்லை. 

பெண் குழந்தைகள் வயதுவருவதை மெனார்கே என்கிறார்கள். ஆண் குழந்தைகள் வயதுக்கு வருவது ஸ்பர்மெர்கே என்று சொல்கிறார்கள். அதாவது பெண் குழந்தைகள் ரத்தப்போக்கு வந்தால் வயதுக்கு வந்ததாக சொல்வது போல, ஆண் குழந்தைகளுக்கு தூக்கத்தில் விந்து வெளிப்படுவதை ஸ்பர்மெர்கே (spermarche) என்கிறார்கள். இந்த சம்பவம் ஆண் பிள்ளைகளின் 11அல்லது 13 வயதில் நடக்கலாம். இப்படி விந்து வெளியேறுவதை ஆண் குழந்தைகள் கவனித்தாலும் வெளியே சொல்வதில்லை. தயக்கம் தான். 

பொதுப்படையாக விந்து வெளியேற்றத்தை மட்டும் அடிப்படையாக வைத்து ஆண் குழந்தைகள் வயதுக்கு வருகிறார்கள் என தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. மற்ற சில அறிகுறிகள் கூட வெளியே தெரியும். இதை ஐந்து படிநிலைகளால் கண்டறியலாம். 


ஆண் குழந்தைகளின் பத்து அல்லது 11 வயதில் அவர்களுடைய ஆணுறுப்பு வளர்ச்சியில்லாமல் இருக்கும். மீசை, தாடி எதுவும் காணப்படாது. ஆணுறுப்பைச் சுற்றி முடியும் இருக்காது. இதெல்லாம் அவர்கள் பருவம் எய்தும்போது வளரும். ஆரம்ப கட்டத்தில் கொஞ்சமாக முடி வளரத் தொடங்கும். அக்குள் முடி, மீசை, தாடி ஆகியவை வளர ஆரம்பிக்கும். ஆணுறுப்பில் வளர்ச்சி உண்டாகும், விதைப்பை அளவில் பெரியதாக மாற்றம் பெறும். பெண்கள் மீதான ஈர்ப்பு அதிகமாகும். பாலியல் ஆசைகள் துளிர்விடும். 

ஆண்களின் விந்துப்பை முழுமையான வளர்ச்சி என்பது 14 முதல் 25 மில்லி அளவாகும். விந்துப்பை அளவில் சிறியதாக இருந்தால் விந்தணுக்கள் உற்பத்தி காணப்படாது. ஹார்மோன் சீராக இருக்காது. ஆண் குழந்தைகளின் 14 -15 வயதுகளில் குரலில் மாற்றம் ஏற்படும். இந்த வயதில் உள்ளாடைகளில் விந்து ஒட்டியிருக்கும். சிலர் ஆண் குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிப்பார்கள். அதாவது 12 வயது ஆண் குழந்தைக்கு 8 வயது குழந்தையை விட சின்ன ஆணுறுப்பு உறுப்பு இருந்தால், மருத்துவர்களை அணுக வேண்டும். இது ஆண் பிள்ளைகளை பெற்றோர் பார்க்க வேண்டிய விஷயம். 

ஆண் குழந்தைக்கு குறிப்பிட்ட வயதிலும் தாடி மீசை வளராவிட்டால் ஹார்மோன் பிரச்சனையா என மருத்துவரிடம் சோதிக்க வேண்டும். ஆணுறுப்பு வளர்ச்சி, மீசை தாடி வளர்ச்சி போன்றவை. வளராவிட்டால் அவர்களுடைய பிரச்சனையை ஆராய வேண்டும். 15 அல்லது 16 வயதிலும் மருத்துவரிடம் அழைத்து செல்லலாம். சில ஆண் பிள்ளைகள் 18 வயது வரை கூட அப்படியே இருப்பார்கள். அவர்கள் நிச்சயம் மருத்துவரை அணுகி சரியான பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வயதுக்கான ஹார்மோனும் சரியாக செயல்பட வேண்டும். அதிலும் விந்துப்பை அளவு, ஆணுறுப்பு அளவு, முடி வளர்ச்சி ஆகியவை பெற்றோரால் சரியாக கவனிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். 

Latest Videos

click me!