ஆண்களுடைய பருவ காலத்தில் தூக்கத்தில் விந்து வெளியேறும் அனுபவம் சிலருக்கு இருக்கும். ஆனால் இது பாலியல் பிரச்சனைகளில் ஒன்றுதான். சில இளைஞர்களுக்கு தூக்கத்தில் பாலியல் கனவுகள் வரும். உடலுறவில் ஈடுபடும் கனவுகள் வருவது இயல்பானது தான். ஆனால் சில ஆண்களுக்கு அந்த சமயம் விந்துவும் வெளியேறிவிடும். மாதத்தில் 4 முறையாவது இப்படி நடக்கும். இதனால் என்னென்ன மாற்றங்கள் வாழ்வில் ஏற்படும் என்பதை இங்கு காணலாம்.
பருவ வயதை எய்திய ஆண்களுக்கு உடலுறவு கொள்வது போன்ற கனவுகளும், அதன் தொடர்ச்சியாக விந்து வெளியேறுவதும் சாதாரணமாக நடக்க கூடியது தான். எல்லா பருவ வயதினருக்கும் உடல் மற்றும் உள்ள மாற்றங்களினால் இது போன்று நடக்கும். இதனால் ஆபத்து என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அந்த அளவுக்கு பயப்பட தேவையில்லை.
உலகில் உள்ள 70% ஆண்கள் விந்து முந்துதல் பிரச்சனையால் அவதிபடுகின்றனர். இவர்களுக்கு உடலுறவு வைத்து கொண்ட 2 நிமிடங்களுக்குள் விந்து வெளியேறிவிடும். உச்சகட்டம் வந்ததும் விந்துவும் வெளியேறும். இதில் கவலை கொள்ள ஏதும் அவசியம் இல்லை. அடிக்கடி உடலுறவில் ஈடுபடாதபோது இப்படி நடக்கலாம். திருமணம் செய்தவர்கள் நீண்ட காலம் உடலுறவை விட்டு விலகியிருந்தாலும் இப்படி விந்து வெளியேறும்.
மாதத்தில் மூன்று முதல் 4 முறை இப்படி நடப்பது பெரிய விஷயம் இல்லை. இளவயதில் இந்த மாற்றங்களால் எந்த பிரச்சனையும் இல்லை. அடிக்கடி இந்த மாதிரி வந்தால் தடுக்க முயற்சி செய்ய வேண்டும். இது தொடர்பாக மருத்துவருடன் ஆலோசனை செய்ய வேண்டும்.