திருமணமான தம்பதியினருக்கு முதலிரவு மிகவும் முக்கியமான நாள். இந்த நாளில் நடக்கும் விஷயங்களை மறப்பது அவ்வளவு சுலபமல்ல. பெரும்பாலும் பெண்கள் ஆயுளுக்கும் இதை மறப்பதேயில்லை. இதில் மகிழ்வான தருணங்கள் இருந்தால் அதை ஒவ்வொரு முறையும் சொல்லி மகிழலாம். ஆனால் ஏதேனும் தவறு செய்துவிட்டால் அது வாழ்நாள் முழுக்க உங்களை பின்தொடரும். அந்த வகையில் ஆண்கள் முதலிரவில் செய்யும் சில தவறுகளை இங்கு காணலாம்.
ஆண்கள் தங்களுடைய துணையை ஏமாற்ற கூடாது. திருமணமான முதல் நாளிலே கணவன் ஏதேனும் ஏமாற்று வேலைகள் செய்வது குறித்து மனைவிக்கு தெரிய வந்தால் அதை அவரால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. முடிந்தவரை போலியான வாக்குறுதிகள் கொடுப்பதை தவிருங்கள். நான் உனக்காக இதை செய்வேன். அதை செய்வேன் என்பது போன்று சொல்லிவிட்டு, அவற்றை செய்யாமல் தவிர்ப்பது உங்கள் மீதான நம்பிக்கையை குறைக்கும்.
திருமணம் முடிந்த முதல் நாள் இரவில் பெண்களிடம் எப்படி நடக்கவேண்டும் என பல ஆண்களுக்கு தெரியாது. பெண்களும் தயக்கமாக இருப்பார்கள். இந்த சமயம் ஆண்கள் சகஜமாக பேசி நம்பிக்கையளித்தால் தான் எல்லாம் நல்லபடியாக நடக்கும். ஆண்கள் தயக்கம் அல்லது அவசரம் காட்டினால் பெண்களும் தாங்கள் நினைப்பதை சொல்லாமல் விலகி இருப்பார்கள்.
முதலிரவில் சில ஆண்கள் சோர்வில் தூங்கிவிடுவார்கள். கல்யாண வேலை செய்த அலுப்பு அப்படியிருக்கும். இப்படி அசதியால் தூங்கினாலும் உங்கள் துணை குறித்தும் சிந்திக்க வேண்டும். உங்களுடைய நிலையை மனைவியிடம் சொல்லி விட்டு அவரை வசதியாக உணர செய்த பின்னர் தூங்குங்கள். இல்லையென்றால் முதலிரவில் உங்கள் துணை சங்கடமாக உணர்வார்.
இதையும் படிங்க: உடலுறவை தவிர்த்து தள்ளிப் போடுவதால் இவ்ளோ ஆபத்துக்களா?!!
சில பெண்கள் திருமணம் ஆனதும் குழந்தை பெற விரும்பமாட்டார்கள். கணவருடன் தனிமையில் மகிழவே விரும்புவார்கள். இப்படி விரும்பும் பெண்கள் முதலிரவின் போது கணவர் ஆணுறை போட வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் சில ஆண்களுக்கு ஆணுறை விருப்பம் இருக்காது. அதனால் மனைவியை ஏமாற்றி ஆணுறையை தவிர்த்துவிடுகிறார்கள். இந்த உண்மை தெரிய வரும்போது உங்களிடையே நம்பிக்கையின்மை வரும். அதனால் முன்கூட்டியே எல்லாம் பேசிவிட்டு மேற்கொண்டு செயலில் ஈடுபடுங்கள்.
இதையும் படிங்க: பெண்கள் செக்ஸ் வாழ்க்கையில் என்ன எதிர்பார்க்கிறார்கள் தெரியுமா? நீங்க நினைக்குற மாதிரி அது இல்ல..!