உங்கள் துணை உங்களை மிஸ் பண்ணவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க..!!

First Published | Jun 26, 2023, 5:32 PM IST

பெரும்பாலானோர் தங்கள் துணையிடம் தன்னை மிஸ் பண்ணவில்லை என்று கூறி சண்டையிட்டு வருகின்றனர். இவ்வாறு உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்தால் இதனை சரி செய்வதற்கான சில உதவி குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இப்போதெல்லாம் அனைவரின் ஷெட்யூலும் பிஸியாக இருக்கிறது. காலை முதல் மாலை வரை மக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வேலையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இதன் காரணமாக, உறவுகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. தங்கள் துணையிடம் தன்னை மிஸ் பண்ணவில்லை என்று கூறிவருகினறனர். நீங்கள் அப்படி உணர்ந்தால், நீங்கள் சில உதவிக்குறிப்புகளை பின்பற்றுவது நல்லது. வாங்க அது குறித்து பார்க்கலாம்.

சிறிது இடைவெளி வேண்டும்:
எந்தவொரு உறவுக்கும் சிறிது இடைவெளி மிகவும் முக்கியமானது. நாம் எப்போதும் ஒருவருக்காக இருக்கும்போது,     அது நம்மைப் பற்றிய அனைத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறது. இந்த காரணத்திற்காக, அவர்கள் உங்களுக்கு மெசேஜ் செய்யவோ அல்லது உங்களை உங்களுக்கு போனில் பேசவோ விரும்பவில்லை. எனவே, உங்கள் இருவருக்கும் சிறிது இடைவெளி இருந்தால் உங்கள் துணையே உங்களைத் தேடி வந்து பேசுவார்.

Tap to resize

அடிக்கடி உங்கள் துணைக்கு மெசேஜ், செய்யாதீர்கள்:
உறவை சீராகச் செய்ய, இரு தரப்பிலும் சமமான முயற்சிகள் இருப்பது மிகவும் முக்கியம். நீங்கள் எப்போதும் உங்கள் துணைக்கு அடிக்கடி போனில் பேசுவது, மெசேஜ் அனுப்புவது அவசியமில்லை. நீங்கள் 1 முறை அழைக்கிறீர்கள் என்றால், உங்கள் துணையின் அழைப்பிற்காக காத்திருக்கவும். இதைச் செய்வதன் மூலம், உங்கள் துணை உங்களை போனில் அழைப்பார் மற்றும் மெசேஜ் செய்வார்.

அவர்களை சார்ந்து இருக்காதீர்கள்:
நீங்கள் யாரையும் சார்ந்து இருந்தால், அவர்கள் உங்களுக்குத் தேவை என்று உணருவார்கள். இதனால் உறவில் இடைவெளி ஏற்பட்டு, சச்சரவுகள் அதிகரித்து முக்கியத்துவம் குறைகிறது. எனவே, உங்கள் சொந்த விஷயங்களை நீங்களே செய்ய முயற்சி செய்யுங்கள். உங்கள் துணை இல்லை என நீங்கள் மோசமாக உணர்கிறீர்கள் என்று நினைக்க வேண்டாம்.

இதையும் படிங்க: முதலிரவில் ஆண்கள் செய்யும் 4 தவறுகள் என்னென்ன தெரியுமா?

புறக்கணிக்கப்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்:
இந்த அனைத்து உதவிக்குறிப்புகள் தவிர, உங்கள் துணை உங்களைத் மிஸ் பண்ண வில்லை என்றால், அதற்குப் பின்னால் உள்ள காரணத்தைக் கண்டறியவும். உங்கள் துணைக்கு பிடிக்காத ஒன்று நீங்கள் செய்து இருக்கலாம். அதனால் தான் அவர் உங்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.

Latest Videos

click me!