Relationship
உடலுறவு கொள்ள இரவு நேரம் தான் சிறந்தது என நினைக்கிறார்கள். ஆனால் காலை நேரத்தில் உறவு கொள்வது இன்பம் மட்டுமின்றி, ஆரோக்கியமும் தருமாம்.
காலை நேரம் உடலுறவு கொள்ள எந்த திட்டமிடலும் அவசியமில்லை. படுக்கையில் தூக்கம் கலையும் தருணம் என்பதால் உடலளவில் நெருக்கம் எளிமையாக ஏற்படும்.
நன்றாக தூங்கிவிட்டு காலையில் உடலுறவு கொள்வதால், உடலில் இருக்கும் மகிழ்ச்சி ஹார்மோனான எண்டோர்பின் வெளியிடப்படும். இதனால் மனநிலை மேம்படும்.
காலையில் உடலுறவு கொள்வதால் உடலில் உள்ள ஹார்மோன்கள் தூண்டப்படும். இது பதட்டத்தைக் குறைத்து புத்துணர்வை ஏற்படுத்தும். சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். Img credit : Plus Life Health
காலை நேரம் உடலுறவு வைத்தால் மன அழுத்தம் குறையும். கணவன் மனைவி உறவில் நெருக்கம் உண்டாகும்.
ஒரு நாளை தொடங்கும்போது உடலுறவு வைப்பதால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உணர்வு ரீதியாக பிணைப்பு அதிகமாகும். புரிதல் அதிகமாகும்.
உடற்பயிற்சியால் உடல் எப்படி நன்கு இயங்குகிறதோ அதைப் போல உடலுறவிலும் பலன்கள் கிடைக்கும். இது இதயத்திற்கு நல்ல பயிற்சியாகும்.
காலை நேர உடலுறவால் ஆண்களுக்கு டெஸ்ட்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகம் சுரக்கும். இது பாலியல் செயல்பாட்டை மேம்படுத்தும்.
வெகுநேரம் தூங்கிவிட்டு உறவு கொள்வதால் உடல் சுறுசுறுப்பாக இயங்கும். சோர்வே இருக்காது.
காலையில் உடலுறவு கொள்வதால் உடல், மனம் இரண்டுமே புத்துணர்வாக இருக்கும். அதனால் இனிமேல் காலையிலும் உறவு கொள்ளுங்கள்.