இனிப்புகளை விரும்பாதவர்கள் மிகவும் குறைவு. காலை டீயில் இருந்து சர்க்கரையை பல வழிகளில் நாம் எடுத்து கொள்கிறோம். இனிப்புகள் சுவையாக இருக்கலாம். ஆனால் இது நமது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். சர்க்கரை நோய் ஏற்படுகிறது. அதிக சர்க்கரை உட்கொள்ளல் இதய நோய்களை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? சர்க்கரை நமது இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கிறது. அதனால்தான் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையை சுத்தமாக சாப்பிடுவதில்லை. சர்க்கரையில் கலோரிகள் அதிகம். அதனால் தான் இதை சாப்பிட்டால் எளிதில் உடல் எடை கூடும்.