
பொதுவாக உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கலோரிகளை குறைவாக எடுத்துக் கொள்வது வழக்கம். எடையை வேகமாக குறைப்பதற்கு குறைவான கலோரியின் அளவை எடுத்துக்கொள்வது நல்லது என்றாலும், கலோரியால் உடல் எடையை கூடாதவர்களுக்கு இது நல்லதல்ல.
உண்மையில் எடையை குறைப்பதற்கு கலோரியின் அளவை குறைத்தாலும், நம்முடைய உடலில் போதுமான அளவு கலோரிகள் இல்லையென்றால், அது நம்முடைய உடலில் சில பாதிப்பை ஏற்படுத்து விடும். அதாவது முடி உதிர்தல், நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சரி இப்போது உடலில் கலோரி குறைபாடு இருந்தால் அதை உணர்த்தும் சில அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
முடி உதிர்தல் என்பது சாதாரண பிரச்சினையாக இருந்தாலும், சில சமயங்களில் கலோரி குறைபாட்டு காரணமாகவும் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும். ஆரோக்கியமான உணவு பழக்கம் மற்றும் கூந்தல் பராமரிப்பு செய்தாலும் முடி உதிர்தல் பிரச்சனை நீங்கள் சந்திக்கிறீர்கள் என்றால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கவனிக்க வேண்டிய விஷயம். ஏனெனில் அது கலோரி குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். எனவே உங்களது உணவில் கலோரியின் அளவை கூட்டிக் கொள்ளுங்கள். அப்போதுதான் முடி உதிர்தல் பிரச்சனை நின்று ஆரோக்கியமான மற்றும் வலுவான கூந்தலை பெறுவீர்கள்.
உங்களது சருத்தில் வறட்சி, வெடிப்பு, அரிப்பு இருந்தால் கூட அதை கலோரி மற்றும் பிற ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். பொதுவாக பல சரும பிரச்சனைகளுக்கு வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி குறைபாடு தான் காரணம். நீங்கள் திடீரென கலோரியின் அளவை குறைத்துக் கொள்ளும் போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களின் அளவும் குறைந்துவிடும். இதனால் விளைவாக சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படும். எனவே நீங்கள் உடல் எடையை குறைக்கும் போது சருமத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனே உங்களது டயட்டை நிறுத்திவிட்டு, அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு அடிக்கடி உடல்நிலை சரி இல்லாமல் போகுதா? இருமல், சளி, ஜலதோஷத்தால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்களது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து போதிய அளவு இல்லையென்றால், இந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியமாக இருக்க நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம். எனவே உங்களது உணவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய வைட்டமின் சி, வைட்டமின் டி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகரிக்கவும்.
நீங்கள் சாதாரண வெப்பநிலையிலும் குளிர்ச்சியாக உணர்கிறீர்கள் என்றால் அது கலரில் குறைபாட்டின் அறிகுறியாகும். ஏனெனில் நம்முடைய உடலின் வெப்பநிலை மற்றும் கலோரியின் அளவு இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதால் உடலில் வெப்பத்தை உருவாக்க போதுமான அளவு கலோரிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உடலின் வெப்பநிலை சீராக இருக்கும். உடலில் போதுமான அளவு கலோரிகள் இல்லை என்றால் உடலின் வெப்பநிலையானது சீராக இருக்காது.
நீங்கள் காரணம் இல்லாமல் எரிச்சலாக உணர்கிறீர்கள் என்றால் அது கலோரி குறைபாட்டின் அறிகுறிகளில் ஒன்றாகும். குறைவாக சாப்பிடுதல், எப்போதுமே பசிப்பது போன்ற உணர்வுகள் தான் எரிச்சல் உணர்வாக மாறுகிறது. இதனால் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகும், காரணம் இல்லாமல் எரிச்சல் ஏற்படும் மற்றும் மந்தமாக இருப்பது.
குறிப்பு : மேலே சொன்ன சொல்லப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் உங்களது உடலில் தோன்றினால் உடனே உங்களது உணவில் கலோரியின் அளவை அதிகரிக்கவும்.