
பாடி ஸ்பிரே என்பது தற்போது பெரும்பாலான நாகரீகர்களின் விருப்பமான பொருளாகும். வியர்வை துர்நாற்றத்தை தவிர்க்க பெரும்பாலான மக்கள் பாடி ஸ்பிரேயை பயன்படுத்துகிறார்கள். இன்னும் சிலரோ சிறந்த தோற்றத்திற்காக பாடி ஸ்ப்ரேக்களே பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்கள் தினமும் பாடி ஸ்பிரேக்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் தினமும் பாடி ஸ்பிரே பயன்படுத்துவது உங்களது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், உங்களுக்கு பாடி ஸ்ப்ரே பயன்படுத்துவது மிகவும் பிடிக்கும் என்றால், அவற்றால் ஏற்படும் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் பாடி ஸ்ப்ரே பயன்படுத்துகிறீங்கள் என்றால், அதுவும் அதிகமாக பயன்படுத்தினால் ஆல்கஹால் உள்ளடக்கமானது உங்களது சருமத்தின் மேற்பரப்பில் அரிப்பு மற்றும் சிவப்பு தடுப்புகள் போன்ற சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
சுவாசிப்பதில் சிரமம்:
நீங்கள் பயன்படுத்தும் பாடி ஸ்பிரே ஆனது நீங்கள் சுவாசிக்கும் அறைக்காற்றுடன் கலக்கும்போது அதில் இருக்கும் துகள்களானது, உங்களது சுவாசத்தின் உடலுக்குள் சென்று சுவாச குழாயில் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதன் காரணமாக சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
பாடி ஸ்ப்ரைகளில் பென்சில் மற்றும் சல்பேட் போன்ற கலவைகள் இருப்பதால் அதை நீங்கள் பயன்படுத்தும் போது, உங்களுக்கு கடுமையான தலைவலி, ஒற்றை வலியை ஏற்படுத்தும் சில சமயங்களில் ஆஸ்துமா வருவதற்கு கூட வாய்ப்பு அதிகம் உள்ளது.
வலிப்பு:
பாடி ஸ்ப்ரே பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்தான பக்க விளைவு என்னவென்றால், இதன் அதிகப்படியான பயன்பாடு ஆனது சிலருக்கு வலிப்பை ஏற்படுத்தி விடும்.
இதையும் படிங்க: கழுத்தில் Perfume யூஸ் பண்ணா கழுத்து கருப்பா மாறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
பாடி ஸ்பிரே நீங்கள் அதிகமாக பயன்படுத்தினால் அது உங்களது மூக்கன் வழியாக சென்று, உங்களது மூளை மற்றும் ஹார்மோன்களில் சிக்கலை ஏற்பட்டு இதன் காரணமாக மன சோர்வு, மனநோய் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
கல்லீரல் பிரச்சனைகள்:
பாடி ஸ்பிரே பயன்படுத்துவதால் மற்றொரு ஆபத்தான பிரச்சனை என்னவென்றால், கல்லீரல் பிரச்சனைதான். அதாவது பாடி ஸ்பிரே பயன்படுத்தும்போது அதில் இருக்கும் நரம்பு மண்டலத்தையும் கல்லீரத்தையும் மோசமாக பாதிக்கும். இதனால் கல்லீரல் புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு போன்ற கடுமையான பிரச்சனைகள் ஏற்படும்.
இதையும் படிங்க: பெர்பியூம் போடுற குழந்தைகளுக்கு 'கணக்கு' வராதாம்.. ஏன் தெரியுமா?
பாடி ஸ்பிரே பயன்படுத்தும் போது உங்கள் அக்குள் கருமையாகிவிடும் தெரியுமா? ஆம், நீங்கள் அதை உங்களது சருமத்தில் நேரடியாக தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், படிப்படியாக அது உங்களது சருமத்தை கருமையாக்க தொடங்கும்.
நினைவில் கொள்:
- குழந்தைகளுக்கு பாடி ஸ்பிரே அல்லது வேறு ஏதேனும் வாசனை திரவியங்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். ஏனெனில் இது அவர்களுக்கு சுவாச பிரச்சனை, சரும பிரச்சனை மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
- பாடி ஸ்ப்ரே அல்லது வேறு ஏதேனும் வாசனை திரவியம் பயன்படுத்தும் போது உடலில் நேரடியாக பயன்படுத்தாமல் ஆடைகளில் தெறிக்க வேண்டும்.
- அதுபோல நகைகள் அணியும் முன் வாசனை திரவியத்தை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அதில் கலந்து இருக்கும் ரசாயனங்கள் நகைகளின் பளபளப்பை பாதிக்கும்