உங்க குழந்தை புத்திசாலியாக வளர.. இந்த உணவுகளை கண்டிப்பா கொடுங்க!!

Published : Feb 01, 2025, 12:33 PM IST

Brain Healthy Foods For Kids : உங்கள் குழந்தையின் மூளை சக்தி அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

PREV
15
உங்க குழந்தை புத்திசாலியாக வளர.. இந்த உணவுகளை கண்டிப்பா கொடுங்க!!
உங்க குழந்தை புத்திசாலியாக வளர.. இந்த உணவுகளை கண்டிப்பா கொடுங்க!!

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தங்களால் முடிந்த வரை பல முயற்ச்சிகளை செய்கிறார்கள். வளரும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு மன வளர்ச்சியும் மிகவும் அவசியம். இதற்கு சரியான உணவு பழக்கம் கொடுப்பது மிகவும் முக்கியம். ஆகைவே, குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மூளை ஆரோக்கியத்தையும் சிறப்பு கவனம் செலுத்துவது வேண்டும். எனவே குழந்தைகளின் மூளையில் செயல்பாட்டை அதிகரிக்க அவர்களுக்கு என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும்? குழந்தைகளின் மூளையை கூர்மையாக்கும் உணவு எது? என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

25
பெர்ரி:

பெர்ரிகளில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது குழந்தைகளின் ஞாபக சக்தியை கூர்மையாக்கும். மேலும் இது மூளையில் சிறந்த ரத்த ஓட்டத்திற்கு பெரிதும் உதவுகிறது.  எனவே உங்கள் குழந்தையின் புத்தி கூர்மையாக இருக்க அவர்களுக்கு பெர்ரி கொடுங்கள்.

உலர் பழங்கள்:

பாதாம், பிஸ்தா, வால்நட், பூசணி விதைகள் மற்றும் சியா விதைகள் போன்றவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள் மற்றும் பல வைட்டமின்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளின் மூளையை சரியாக செயல்பட உதவுகிறது. எனவே தினமும் குழந்தைகளுக்கு இவற்றை கொடுங்கள்.

35
மீன்:

மீனில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாக இருப்பதால், இது குழந்தைகளின் மூளை சரியான செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது. எனவே உங்களது குழந்தையின் உணவில் சால்மின் மற்றும் மத்தி மீன்களை சேர்க்கலாம்.

முட்டை:

முட்டை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஒரு சூப்பர் ஃபுட் ஆகும். அதிலும் குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவில் கோலின் உள்ளது. இதில் இதன் நுகர்வு நல்ல நினைவாற்றல் மற்றும் மூளை செல்களுக்கு இடையே தொடர்பு கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் முட்டையில் புரதம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலம் என்பதால், குழந்தைகளின் உணவில் தினமும் முட்டை சேர்க்கவும்.

இதையும் படிங்க:  குளிர்காலத்துல குழந்தைகளுக்கு எந்த உணவுகளை கொடுக்க கூடாது தெரியுமா?

45
முழு தானியங்கள்:

ஓட்ஸ், பழுப்பு அரிசி மற்றும் குயினோவா போன்ற முழு தானியங்கள் கார்போஹைட்ரேட்டின் சிறந்த ஆதாரங்கள் ஆகும். அவை குழந்தைகளின் மூளையை அதிகரிக்க உதவுகின்றது. மேலும் இது குழந்தைகளின் கவனம் செலுத்தி திறனை அதிகரிக்கிறது மற்றும் நாள் முழுவதும் அவர்களது நினைவாக செயல்பாட்டை ஆதரிக்கிறது. இது தவிர, முழு தானியங்களில் வைட்டமின் ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ரொம்பவே நல்லது.

பச்சை காய்கறிகள்

கீரைகள், ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகளில் பல வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை சிறந்த நினைவாற்றல் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. இவை உங்கள் குழந்தையின் மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

55
தயிர்:

தயிரில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு இவை மிகவும் அவசியம். மேலும் தயிரில் இருக்கும் புரோபயாடிக்குகள் உங்கள் குழந்தையின் நினைவாற்றலைக் கூர்மைப்படுத்த பெரிதும் உதவுகிறது.

இனிப்பு உருளைக்கிழங்கு

இனிப்பு உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளன. இது குழந்தையின் மூளைக்கு தேவையான ஆற்றலை வழங்க உதவுகிறது. மேலும் நினைவாற்றல் மேம்படுத்தும் பீட்டா கரோட்டினும் இதில் உள்ளன.

இதையும் படிங்க: உங்க குழந்தைக்கு இந்த 5 உணவுகளை தினமும் சாப்பிட கொடுங்க.. இனி மடமடனு சூப்பரா வெயிட் போடும்!

Read more Photos on
click me!

Recommended Stories