கிரீன் டீ ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுபவர்கள் இதை தினமும் குடிக்கிறார்கள். இது செரிமானத்தை மேம்படுத்தும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றும் மற்றும் மனதை அமைதிப்படுத்தும் என பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். கிரீன் டீயில் நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் இருக்கிறது. ஆம், கிரீன் டீ குடிக்கும்போது செய்யும் சில தவறுகள் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்குவதற்கு பதிலாக தீங்கை விளைவிக்கிறது. ஆகவே க்ரீன் டீ குடிக்கும் போது தவிர்க்க வேண்டிய சில தவறுகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
25
அதிக சூட்டில் குடிக்காதே!
கிரீன் டீயை அதிக சூடாக குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிக சூட்டில் குடித்தால் அமில உற்பத்தியை அதிகரிக்கும். மேலும் வயிற்றில் எரிச்சல் உணர்வு, வீக்கம், வலி மற்றும் கனத்தை ஏற்படுத்தும். இது தவிர கிரீன் டீயை அதிக சூடாக குடிக்கும் போது அதில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகளால் உடலுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்காமல் போகும்.
35
வெறும் வயிற்றில் குடிக்காதே!
வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பது நல்லதல்ல. ஏனெனில் அது வாதம், பித்தம் இரண்டையும் சமநிலைப்படுத்தாது. காரணம் கிரீன் டீயில் இருக்கும் காஃபின் வயிற்றில் அமில அளவை அதிகரிக்க செய்யும். இதனால் வாயு தொல்லை, வயிற்று பிடிப்பு ஏற்படும். ஆகவே வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்கவும்.
விரைவான எடை இழப்புக்கு ஒரு நாளைக்கு பல கப் கிரீன் டீ குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏனெனில் அதிகப்படியான காஃபின் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது தவிர அதிகமாக கிரீன் டீ குடித்தால் உடலில் இரும்புச் சட்டை உறிஞ்சும் திறனை குறைத்து விடும். ஆகவே ஒரு நாளைக்கு 2-3 கப் கிரீன் டீ குடிப்பதே போதுமானது.
55
சர்க்கரை வேண்டாம்!
சில கிரீன் டீயின் சுவையை அதிகரிக்க அதில் சர்க்கரை சேர்த்து குடிக்கிறார்கள். ஆனால் இப்படி குடிப்பது ஆரோக்கியமற்றது. ஏனெனில் கிரீன் டீயானது லேசான மற்றும் குளிர்ச்சியான பண்பை கொண்டுள்ளது. அதுபோல சர்க்கரையானது கனமான மற்றும் வெப்பமூட்டும் தன்மையுடையது. எனவே இவை இரண்டும் ஒன்று சேர்ந்தால் செரிமானத்தை மெதுவாக்கும். அதுபோல கிரீன் டீயில் பால் சேர்த்து குடித்தால் வீட்டில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள் புரதங்களுடன் இணையும். இதனால் உடலால் அவற்றை முழுமையாக உறிஞ்சப்படுவதை தடுக்கப்படும். எனவே எந்தவித கலப்படம் இல்லாத கிரீன் டீ ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்கும்.