Bananas For Constipation : மோசமான மலச்சிக்கல் கூட இந்த 1 பொருளை 'வாழைப்பழத்துடன்' சேர்த்து சாப்பிட்டால் தீரும்!!

Published : Dec 05, 2025, 03:27 PM IST

மலச்சிக்கல் பிரச்சனைக்கு வாழைப்பழத்துடன் எதை, எப்படி சாப்பிட வேண்டுமென்று இந்த பதிவில் காணலாம்.

PREV
14
Bananas For Constipation

மலச்சிக்கல் என்பது தவறான உணவு பழக்கம், உட்கார்ந்த வாழ்க்கை முறை, உடல் உழைப்பின்மை போன்றவற்றின் காரணமாக ஏற்படும். நீங்கள் இயற்கை முறையில் மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வு தேடுகிறீர்கள் என்றால் வாழைப்பழம் உங்களுக்கு உதவும். ஆமாங்க, வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது குடல் இயக்கத்தை தூண்டும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். எனவே மலச்சிக்கலுக்கு வாழைப்பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் இப்போது பார்க்கலாம்.

24
வாழைப்பழமும் தேனும் :

இதற்கு நன்கு பழுத்த வாழைப்பழத்தை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி அதன் மீது தேன் சேர்த்து கலந்து சாப்பிடவும். ஒரு நாளைக்கு 1-2 முறை இப்படி சாப்பிட்டவும். தேன் லேசான மலமிளக்கி விளைவை கொண்டிருப்பதால் இது மலச்சிக்கலை போக்க பெரிதும் உதவும்.

34
வாழைப்பழம் மற்றும் பப்பாளி :

ஒரு கப் நன்கு பழுத்த பப்பாளி பழத்துடன் ஒரு பழுத்த வாழைப்பழத்தை சேர்த்து நன்கு கலந்து அதை அடித்து ஒரு கப் தண்ணீருடன் சேர்த்து குடித்து வரவும். ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் இதை குடிக்கக் கூடாது பப்பாளி செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

44
வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ் :

ஒரு கிண்ணத்தில் நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அரை கப் ஓட்ஸ் உடன் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். கலவை கட்டியான பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதை நறுக்கி வைத்த வாழைப்பழத்தில் சேர்க்க வேண்டும் ல். இப்போது இதில் தேவையான அளவு தேன் சேர்த்து சாப்பிடவும். இதை ஒரு நாளைக்கு 1-2 முறை சாப்பிடலாம். ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இது மலச்சிக்கலை போக்க உதவும்.

Read more Photos on
click me!

Recommended Stories