பொதுவாகவே, சிலருக்கு சில நேரங்களில் எந்த உடல் செயல்பாடும் இல்லாமல் உள்ளங்கை வியர்க்கும் நீங்களும் இப்படி உணர்கிறீர்களா? குளிர்காலத்தில் கூட இந்தப் பிரச்சனை வந்தால் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, உள்ளங்கையில் அடிக்கடி வியர்ப்பது கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியாகும். இந்தப் பிரச்சனை வந்தவுடன் மருத்துவரை அணுக வேண்டும். கொழுப்பு கல்லீரல் பிரச்சனை அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் எளிதில் குணப்படுத்த முடியும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால், உள்ளங்கைகள் வியர்வையுடன் இருப்பது கொழுப்பு கல்லீரலின் அறிகுறியாக இருந்தாலும், இந்த அறிகுறிகள் எல்லா நிகழ்வுகளிலும் ஒரே மாதிரியாக இருக்காது என்கின்றனர் நிபுணர்கள்.
ஆனால், சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கல்லீரல் ஈரல் அழற்சி மற்றும் கல்லீரல் செயலிழப்பு ஏற்படலாம். மது அருந்தாதவர்களும் இன்றைய காலகட்டத்தில் கொழுப்புக் கல்லீரலால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தவறான உணவு பழக்கம் மற்றும் அதிகரித்து வரும் உடல் பருமன். இந்த பிரச்சினைகள்
உடல் எடையை அதிகரிப்பவர்களுக்கு தான் அதிகம் வரும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
எப்படி தவிர்ப்பது?
உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை கட்டுப்படுத்தலாம். இதற்கு முதலில் உணவில் உப்பு அளவைக் குறைக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வதும் மிகவும் அவசியம். துரித உணவை முடிந்தவரை தவிர்க்கவும். இருப்பினும், நீங்கள் அஜீரணம் மற்றும் வயிற்றில் அதிகப்படியான வாயு உருவாக்கம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டால், உடனடியாக மருத்துவரை அணுக மறக்காதீர்கள்.