சாதாரண பிரட் vs ரோஸ்ட் பிரட் : எது ஆரோக்கியத்திற்கு நல்லது?

சாதாரண பிரட் அல்லது ரோஸ்ட் பிரட் இவை இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

plain bread vs toasted bread which is healthier in tamil mks

Plain vs Toasted Bread - Which is the Healthier : காலம் மாறி போச்சு. அதனால்தான் தற்போது காலை உணவாக பிரட்டுடன் ஜாம் அல்லது வெண்ணெய் வைத்து சாப்பிடுவது சகஜமாகிவிட்டது. ஆனாலும் ஒரு சிலர் பிரெட்டை டோஸ்ட் செய்து தான் சாப்பிட விரும்புகிறார்கள். இதுவும் தனிப்பட்ட ஒரு விதமான சுவையை கொடுக்கும். ஆனால், உண்மையில் சாதாரண பிரட் அல்லது டோஸ்ட் பிரட் இவை இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது என்று உங்களுக்கு தெரியுமா? இது குறித்து தெரிந்து கொள்வதற்கு முன், குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ள பிரட் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதுபோல எடை இழப்புக்கும் அது உதவும். சரி இப்போது சாதாரண பிரட் அல்லது டோஸ்ட் பிரட் இவை இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

plain bread vs toasted bread which is healthier in tamil mks
சாதாரண பிரட் vs ரோஸ்ட் பிரட் :

சாதாரண பிரட் இனிப்பு சுவை கொண்டது. அதுபோல இது லேசாக பஞ்சு போலே இருப்பதால், சாப்பிடுவதற்கு எளிதாக இருக்கும் ஆனால் இதில் கலோரிகள் உள்ளன. அதுவே ரோஸ்ட் செய்யப்பட்ட பிரட் ஈரப்பதம் குறைந்து மொறு மொறுப்பாக மாறிவிடும். மேலும் சாதாரண பிரட்டை விட இந்த பிரட்டில் கிளைசெமிக் குறியீடு சற்று குறைவாகவே உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் டோஸ்ட் செய்யப்பட்டு பிரட்டில் ஸ்டார்ச்சின் அளவும் சிறிது குறைவாகவே இருக்கும். அதுபோல டோஸ்ட் செய்யப்பட்ட பிரட்டில் கலோரிகளை பெரிதும் குறைப்பது இல்லை. அது ஈரப்பதத்தை மட்டுமே குறைக்கும்.


சாதாரண பிரட் vs ரோஸ்ட் பிரட் : சர்க்கரை நோயாளிகளுக்கு எது பெஸ்ட்?

சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த டோஸ்ட் பிரட் தான் சிறந்த தேர்வாக இருக்கும். அதுவே அதிக நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவைப்பட்டால் பழுப்பு ரொட்டி அல்லது பல தானியங்கள் கொண்ட பிரட்டை சாப்பிடுவது தான் சிறந்தது.

இதையும் படிங்க: குட்டீஸ்க்கு பிடிச்ச பன்னீர் பிரெட் பால்.. ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு செஞ்சு கொடுங்க!

சாதாரண பிரட் vs ரோஸ்ட் பிரட் : எடை இழப்புக்கு எது நல்லது?

எடையை குறைக்க நினைப்பவர்கள் சரியான பிரட்டை தேர்வு செய்து சாப்பிடுவது ரொம்பவே முக்கியம். இதற்கு நீங்கள் சாதாரண பிரட் அல்லது டோஸ் பிரட் இவை இரண்டும் இல்லை. ஆம், இவை இரண்டிற்கும் பதிலாக நீங்கள் பல தானிய மாவு கொண்ட பிரட்டை சாப்பிடுவது தான் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் இவற்றில் தான் வெள்ளை பிரட்டை விட குறைந்த அளவு கிளைசெமிக் குறையீட்டு உள்ளன.

இதையும் படிங்க:  ஈவினிங் டீ காபிக்கு இப்படி பிரட்டில் பஜ்ஜி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்டா இருக்கும்!

சாதாரண பிரட் vs ரோஸ்ட் பிரட் : யாருக்கு எது நல்லது?

- செரிமானம், அமிலத்தன்மை மற்றும் வயிற்றுப்புண் பிரச்சனை உள்ளவர்களுக்கு டோஸ்ட் பிரட் சாப்பிடுவது தான் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் பிரட்டை சூடாக்கும் போது அதில் உள்ள ஸ்டார்ச் குறைந்து விடும். இதனால் சாப்பிடும்போது வயிற்றில் லேசான உணர்வை ஏற்படுத்தும் மற்றும் அமிலத்தன்மையை குறைக்கும். 

- உடலுக்கு அதிக ஆற்றல் தேவை என்று நினைப்பவர்களுக்கு டோஸ்ட் பிரட்டுக்கு பதிலாக சாதாரண பிரட் தான் சிறந்த தேர்வாக இருக்கும். நீங்கள் வெறுமனே பிரட் மட்டும் சாப்பிடாமல் அதில் வெள்ளரிக்காய் தக்காளி காய்கறிகள் வைத்து சாண்ட்விச் ஆக சாப்பிட்டால் கலோரிகளை குறைக்க சிறந்த வழியாக இது இருக்கும். 

- டோஸ்ட் பிரட் சாப்பிட நினைப்பவர்கள் அதனுடன் ஜான்சி போன்றவற்றை வைத்து சாப்பிட வேண்டாம். வேண்டுமானால் சிறிய அளவில் வெண்ணெய் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

சாதாரண பிரட் vs ரோஸ்ட் பிரட் : எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது?

உண்மை என்னவென்றால், சாதாரண பிரட்டை விட, டோஸ்ட் பிரட் தான் உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. அதுவும் குறிப்பாக வீட்டில் தயாரிக்கப்பட்ட டோஸ்ட் பிரட்டாக இருந்தால் அது இன்னமும் நல்லது என்று சொல்லப்படுகிறது.

Latest Videos

vuukle one pixel image
click me!