உங்கள் குழந்தையிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அசால்டா இருக்காதீங்க! அது சர்க்கரை நோய்..

First Published | Feb 10, 2024, 8:03 PM IST

சர்க்கரை நோய் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரையும் தாக்குகிறது. அந்தவகையில், குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும் தெரியுமா..?

சர்க்கரை நோய் என்பது இன்று உலகம் முழுவதும் இருக்கும் ஒரு பிரபலமான நோய். இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இன்சுலின் எதிர்ப்பு குறைபாடு இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.

நீரிழிவு நோய் என்பது வயதானவர்களை மட்டுமே தாக்கும் நோய் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் மாறிவரும் வாழ்க்கை முறையால் தற்போது சிறு குழந்தைகளையும் இந்நோய் தாக்குகிறது. மேலும் இந்நோய் குழந்தைகளின் வளர்ச்சியையும், அவர்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதிக்கிறது. 

Latest Videos


அதனால்தான் குழந்தைகளில் நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், பிரச்சனைகள் அதிகரிக்காது. எனவே, அதற்கான அறிகுறிகளை என்னவென்று இப்போது தெரிந்து கொள்வோம். 
 

திடீர் எடை அதிகரிப்பு: உங்கள் குழந்தையின் திடீர் எடை இழப்பு ஒரு நல்ல விஷயம் அல்ல. இது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். மேலும், இந்த அறிகுறி பெரும்பாலும் டைப்-1 நீரிழிவு நோயில் காணப்பட்டாலும், வகை 2 நீரிழிவு நோய்க்கும் இந்த அறிகுறி உள்ளது. 

அதிகப்படியான சோர்வு: உங்கள் குழந்தை எல்லா நேரத்திலும் சோர்வாக இருப்பது போல் தோன்றினாலும் சந்தேகப்படவும். ஏனெனில் இது நீரிழிவு நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். உடல் செயல்பாடு இல்லாமல் சோர்வாக இருப்பது நல்ல விஷயம் அல்ல. எனவே உங்கள் குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருங்கள். 

இதையும் படிங்க:  30 வயசு தாண்டியாச்சா..? உஷாரா இருங்க சர்க்கரை நோய் வரலாம்...அறிகுறிகள் இதோ..!

அடிக்கடி தாகம் எடுப்பது: இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்தால் கடுமையான தாகம் ஏற்படும். எனவே, உங்கள் பிள்ளையும் திடீரென்று தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் அல்லது மீண்டும் மீண்டும் தாகம் எடுத்தால், உடனே மருத்துவமனைக்குச் செல்லுங்கள். ஏனெனில் இது சர்க்கரை நோயின் அறிகுறி. 

இதையும் படிங்க:  இளம் வயதிலேயே மாதவிடாய் வந்தால் சர்க்கரை நோய் வருமா..? ஷாக் ரிப்போர்ட்!

அடிக்கடி பசியின்மை: உங்கள் குழந்தை அடிக்கடி பசியுடன் இருப்பதாக உணர்ந்தால் நீங்கள் சந்தேகிக்க வேண்டும். ஏனெனில் இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம். வயிறு நிறைய உணவு சாப்பிட்ட பிறகும் உங்கள் குழந்தை மீண்டும் பசியுடன் இருந்தால், இது நீரிழிவு நோயின் அறிகுறியாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அடிக்கடி சிறுநீர் கழித்தல்: அதிகரித்த இரத்த சர்க்கரை நிலையான தாகத்தை ஏற்படுத்துகிறது. அதிக தண்ணீர் குடிப்பதாலும் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். ஆனால், இப்படி அடிக்கடி சிறுநீர் கழிப்பது நீரிழிவு நோயின் அறிகுறி என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 
 

மனநிலை மாற்றங்கள்: தொடர்ந்து அழுகை, எரிச்சல், கோபம் என குழந்தையின் மனநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டால் அதுவும் சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். உங்கள் பிள்ளை இந்த அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைக் காட்டினால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

click me!