பிறக்கும் போது சிலருக்கு பிறவி குறைபாடுகள் முன்னுக்கு வரும். சிலர் அதை அதிர்ஷ்டமாக கருதுகின்றனர் இன்னும் சிலரோ அது தெய்வ கோபம் என்று நினைக்கிறார்கள். இந்த குறைபாடுகளில் ஒன்று தான் கை மற்றும் கால்களில் கூடுதல் விரல்கள் இருப்பது.
இப்போது ஆராய்ச்சியாளர்கள் இதற்கான காரணத்தைக் கண்டுள்ளனர். இந்த நோய்க்கு இதுவரை பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இது மேக்ஸ் என்ற மரபணுவில் உள்ள மரபணு மாற்றத்தால் ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர்.
கூடுதல் விரல்கள், மூளை வளர்ச்சி தொடர்பான பல மன இறுக்கம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மரபணு இணைப்பு கண்டறியப்படுவது இதுவே முதல் முறை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சில நரம்பியல் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் அவை மோசமடைவதைத் தடுப்பதற்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு மூலக்கூறு இதில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த மூலக்கூறை சிகிச்சைக்காகப் பயன்படுத்துவதற்கு முன்பு அதைச் சோதிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவை.
இதையும் படிங்க: சூனியக்காரி என அழைத்ததால் மன வேதனை பட்டவர் இன்று கின்னஸ் சாதனை...!
இந்த நபர்களின் டிஎன்ஏ- வை ஆய்வு செய்யும் போது, அவர்கள் அனைவருக்கும் பொதுவான மரபணு மாற்றம் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், இது அவர்களின் பிறப்பு குறைபாடுகள் அல்லது கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. மேலும் இந்த பிரச்சினைக்கு தற்போது எந்த சிகிச்சையும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் இந்த குறைபாடு உள்ளவர்கள் மரபணு நோயறிதலின் அடிப்படையில் சிகிச்சையைப் பெற முடிந்தால், அவர்களின் வாழ்க்கை மாறலாம். மேலும் இதற்கான சிகிச்சையை ஆராய்ச்சியாளர்கள் இப்போது ஆராய்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.