இதை அறியாத மக்கள் உணவுப்பழக்கத்தில் கவனக் குறைவாக இருக்கின்றனர். சர்க்கரை உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அதிகம் எடுத்து கொள்கிறார்கள். இதனால் இரத்த சர்க்கரை உடனடியாக அதிகரித்து, தமனிகளில் வீக்கத்தைத் தூண்டிவிடுகிறது. அதாவது ஒரு இரும்பு குழாயில் துருப்பிடிப்பது மாதிரி நாளடைவில், இரத்த நாளங்களை சேதமடைகின்றன. இதனால் அவை அடைத்துக் கொள்கின்றன. இவை நீண்டகாலம் பாதிப்பை வெளிப்படுத்தாமல் இதய நோய்களின் அபாயத்தை மட்டும் அதிகரிக்கின்றன.